இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 23 நாகை மீனவர்களை இலங்கையிலுள்ள பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்: 23 மீனவர்களையும் நீதியரசர் கிரிசாந்தன் வரும் 28ஆம் தேதி வரை காரைநகர் கடற்படை முகாமில் தனிமைப்படுத்த வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
நாகை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 11ஆம் தேதி நூற்றுக்கணக்கான விசைப்படகுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கச் சென்றனர். அதில் அக்கரை பேட்டையை சேர்ந்த சிவனேசன் மற்றும் சிவகுமார் சகோதரர்களுக்கு சொந்தமான விசைப்படகில் அக்கரைப்பேட்டை சமந்தன்பேட்டை, சந்திரபாடி, புதுப்பேட்டை, பெருமாள்பேட்டை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 23 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இந்த நிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் கடல் காற்று கடல் சீற்றம் மழையை பொருட்படுத்தாமல் கோடியக்கரை தென்கிழக்கே கடலில் வலை விரித்து மீனுக்காக காத்திருந்த மீனவர்களை அங்கு வந்த இலங்கை கடற்படை நாகை அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவர்களின் விசைப்படகை சுற்றி வளைத்து எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இரண்டு விசைப்படகையும் படகில் இருந்த 23 மீனவர்களை கைது செய்தனர். இலங்கை பருத்தித்துறை கடல் பகுதியில் வைத்து கைது செய்ததாக இலங்கை கடற்படையினர் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் நல்லிரவு கைது செய்யப்பட்ட மீனவர்களையும் படகையும் விசாரணைக்காக காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு இன்று அதிகாலை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அக்கரைப் பேட்டையைச் சேர்ந்த 23 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக குற்றம்சாட்டப்பட்டு இலங்கையிலுள்ள பருத்தித்துறை நீதிமன்றத்தில் அஜர் படுத்தினர். இதுகுறித்து விசாரித்த நீதிபதி கிரிசாந்த வரும் இருபத்தி எட்டாம் தேதி வரை 23 மீனவர்களையும் காரைநகர் கடற்படை முகாமில் தனிமைப்படுத்த வைக்க உத்தரவிட்டார்.
இதனையடுத்து அவர்களை காரைநகர் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று நாகை மீனவர்களை தனிமை படுத்தி உள்ளனர். இதுகுறித்து மீனவர்களின் உறவினர்கள் தெரிவிக்கும் போது ஒவ்வொரு விசைப்படகில் உருவாக்குவதற்கு வங்கியில் கடன் நண்பர்களிடம் கடன் வீட்டில் உள்ள நகைகளை அடகு வைத்தும் வட்டிக்கு வாங்கியும் ஒரு கோடி ரூபாய் அளவில் விசைப்படகுகள் 20 லட்சம் ரூபாய்க்கு மேல் வலைகள் வாங்கி மீன்பிடித் தொழிலுக்கு தயாராகிவிடும் ஒவ்வொரு முறையும் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல 4 லட்சம் முதல் 8 லட்சம் வரை முதலீடு செய்ய வேண்டியுள்ளதாகவும் அதாவது டீசல் ஐஸ் கட்டி தண்ணீர் உணவு பொருட்கள் உள்ளிட்டவைகளை செலவு செய்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றால் பல நேரங்களில் குறைவான மீன்களே கிடைத்து செலவு செய்த பணம் கூட கிடைக்காமல் கடன் மேல் கடன் சுமை எழுவதாகவும் இது மட்டுமில்லாமல் கடலுக்குச் சென்று மீன்பிடிக்க வலைகளை இருக்கும்போது இலங்கை கடற்படையினர் அடித்து விரட்டுவதும் இலங்கை மீனவர்கள் மற்றும் கடற்கொள்ளையர்களால் பாதிக்கப்பட்டு வலைகள் ஜிபிஎஸ் கருவி வாக்கி டாக்கி செல்போன் உள்ளிட்டவைகளை பறிகொடுத்து கரை திரும்பி மீண்டும் வலைகள் டீசல் உள்ளிட்ட மறு முதலீடு செய்ய மீண்டும் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்படுவர் கண்ணீருடன் தெரிவிக்கும் உறவினர்கள்.
இந்திய எல்லைக்குள் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போதே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் தங்களது சொத்துக்களையும் உறவினர்களையும் கைது செய்வது எந்த விதத்தில் நியாயம் பல கட்ட போராட்டங்கள் நடத்தியதில் ஏற்கனவே இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகுகள் சிலவற்றை விடுவித்தது இலங்கை அரசு ஆனால் அந்த படகை இலங்கையில் இருந்து மற்றொரு படகு மூலம் இழுத்து வருவது ஒருபுறம் செலவு என்றாலும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள படகுகளையே இலங்கை அரசு விடுவித்து இருந்தது அதை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர சுமார் 50 லட்சத்திற்கும் மேல் கடன் வாங்கவேண்டிய நிலை உள்ளது. எனது தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் காக்க மத்திய அரசு இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் கடல் பரப்பில் அச்சமின்றி மீன்பிடித் தொழில் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட மீனவர்களின் உறவினர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.