தஞ்சாவூர்: தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை ருக்மணி கார்டன் எதிரே சனிக்கிழமை மதியம் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியிலிருந்து ஒரு காரில் டிரைவர் உட்பட 4 பேர் தஞ்சை நோக்கி வந்தனர். இதேபோல் தஞ்சையிலிருந்து ஊரணிபுரம் நோக்கி மற்றொரில் காரில் 5 பேர் சென்றுள்ளனர். இந்த இரண்டு கார்களும் தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை ருக்மணி கார்டன் நேற்று மதியம் எதிரில் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதை பார்த்து அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு போலீசாருக்கு தகவல் அளித்தனர். உடன் வல்லம் டிஎஸ்பி நித்யா, இன்ஸ்பெக்டர் வசந்தி மற்றும் தமிழ்ப்பல்கலைக்கழக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இந்த விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டனர். மேலும் 7 பேர் காயமடைந்திருந்தனர். தொடர்ந்து போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
தஞ்சையில் பயங்கர விபத்து... 2 கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலி
என்.நாகராஜன் | 19 Dec 2022 03:54 PM (IST)
2 பேர் சம்பவ இடத்திலேயே இறந்த நிலையில், 7 பேர் படுகாயமடைந்து தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் சிக்கிய கார்கள்
Published at: 19 Dec 2022 03:54 PM (IST)