சீர்காழி அருகே நகராட்சி தொடக்கப் பள்ளியில் பயிலும் 15 மாணவ,மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே புளிச்சக்காடு பகுதியில் நகராட்சி தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் இந்த ஆண்டு சுமார் 17 மாணவர்கள் மற்றும் 3 ஆசிரியர்களை கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் தோட்டமானியம், புளிச்சக்காடு ஆகிய பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். 




இந்நிலையில் நேற்று மதியம் 1 மணி அளவில் இந்த பள்ளியில் படித்துக் கொண்டிருந்த தோட்டம் மானியம் பகுதியைச் சேர்ந்த மூன்றாம் வகுப்பை சேர்ந்த 7 வயதான மாணவி பவதாரணி மற்றும் அதே பகுதியை சேர்ந்த யாழினி, கனிஷ்கா, அனுஷ்கா ஆகியோர்களுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அதிர்ச்சி அடைந்த ஆசிரியர் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து இரண்டு 108 ஆம்புலன்ஸ் மூலம்  பள்ளியில் பயின்ற 15 மாணவர்களையும் சீர்காழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. 


Dhanush Viral Photos: ஹாலிவுட் எண்ட்ரி.. தி கிரே மேனின் உச்சக்கட்ட பிரோமோஷன்.. வைரலாகும் தனுஷ் போட்டோஸ்..!




இதில் பவதாரணி, யாழினி, கனிஷ்கா, அனுஷ்கா உள்ளிட்ட 5 மாணவிகளுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து கேள்விப்பட்ட பெற்றோர்கள் ஏராளமான சீர்காழி அரசு மருத்துவமனையில் குவிந்தனர். இதுகுறித்த தகவல் அறிந்த மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்  சீர்காழி அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட மாணவிகள் மற்றும் பெற்றோருக்கு ஆறுதல் கூறினர். 




கல், ஜல்லி போன்ற சிறு கனிமங்களை கொண்டு செல்ல இருந்த வாய் மொழி தடை நீக்கம் - உயர்நீதிமன்றம் மதுரை கிளை


மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தப் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, பள்ளியில் உள்ள தண்ணீர் தொட்டிகள், உள்ளிட்ட அனைத்து நீர்த்தேக்க தொட்டிகளை சுத்தம் செய்வதற்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். பள்ளி மாணவர்கள் டைபாய்டு, காலரா போன்ற நோயால் பாதிக்கப்படவில்லை என்றும் யாரும் அச்சப்பட தேவையில்லை என்றார். மேலும், குழந்தைகளுக்கு தொடர் சிகிச்சை அளிக்கவும் மருத்துவர்களை கேட்டுக் கொண்டனர். 




மாணவர்களுக்கு வீட்டில் வழங்கப்பட்ட உணவில் குறைபாடா அல்லது குடிநீரில் குறைபாடு உள்ளதா என பல்வேறு கோணங்களில் நகராட்சி சுகாதார அலுவலர் செந்தில் ராம்குமார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார். இச்சம்பவம் சீர்காழி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண