மயிலாடுதுறை, தனியூர் வாணியத் தெருவைச் சேர்ந்தவர் செந்தில்குமார் என்பவரின் மகன் 16 வயதான ரித்திஷ் கண்ணா. இவர் மயிலாடுதுறையில் உள்ள நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்தார். இந்நிலையில் இவர் நேற்று வெளியான பதினோராம் வகுப்பு தேர்வு முடிவில் 4 பாடப்பிரிவுகளில் தேர்ச்சி பெறவில்லை. நேற்று வழக்கம்போல் பள்ளிக்குச் சென்ற ரித்திஷ்கண்ணா தேர்வில் தோல்வியடைந்தது தெரியவந்த பின்னரும் வகுப்பில் இருந்துள்ளார். அதன்பிறகு பள்ளி நேர முடிவுக்குப் பின்னர் வீட்டுக்குச் சென்ற மாணவர், வீட்டில் தான் தேர்வில் தேர்ச்சி அடைந்துவிட்டதாக கூறியுள்ளார். 


ஜூலை வரப்போகுது... 31 நாளில் 47 முக்கிய நிகழ்வுகள்... விளையாட்டு, விரதம், தேர்தல், தேடல் அனைத்தும் ஒரே செய்தியில்!


இதனால், மிகுந்த மன உளைச்சலில் இருந்த மாணவர், இரவு மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து, தகவலறிந்த மயிலாடுதுறை காவல் துறையினர் மாணவரின் உடலை மீட்டு மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




ஒவ்வொரு ஆண்டும் பள்ளித் தேர்வுகள் வெளியாகும் போது மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் என்பது தொடர் கதையாக இருந்து வருகிறது. இதற்கு பெற்றோர்கள் மாணவர்களுக்கு ஏற்படுத்திய தாக்கம் ஒருபுறம் என்றாலும், இளம் வயது மாணவர்களுக்கு மனதளவில் இதுபோன்ற ஒரு மனப்பான்மை வளராமல் இருக்க நம் சமூகம் ஏதும் செய்வதில்லை என்பதே நிச்சயமான உண்மை. மாணவர்களை மனதளவில் பக்குவப்படுத்தி தேர்வு முடிவுகள் மட்டும் வாழ்க்கை அல்ல என்பதையும், தாண்டி சாதித்த ஏராளமானவர்களை முன்னுதாரணம் காட்ட வேண்டும் எனவும், அனைத்து பள்ளிகளிலும் நிச்சயம் ஒரு மனநல ஆலோசகர்களை நியமித்து, மாணவர்களின் குணாதிசயங்களை கண்காணித்து, அவர்கள் தவறான வழியில் செல்வதை தவிர்க்க பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே இதுபோன்ற தற்கொலைகளை தடுக்கலாம் என சமூக ஆர்வலர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.




மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம். சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,


எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,


சென்னை - 600 028.


தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண