தஞ்சாவூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு வரும் பழைய சாலையின் தார்களை பெயர்த்துவிட்டு புதிய சாலைகளை அமைக்க வேண்டும் என நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலர் சிவதாஸ்மீனா தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சுமார் 1,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில், பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச்செயலர் சிவதாஸ் மீனா, நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா ஆகியோர் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பழைய பேருந்து நிலையம், ஆம்னி பேருந்து நிலையம், ராஜப்பா பூங்கா, மணிகூண்டு, அருளானந்தம்மாள் நகரில் சாலைகள் சீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை நேரில் ஆய்வு செய்தார். தொடர்ந்து மாநகராட்சி அலுவலகத்தில் பணி முன்னேற்றம் தொடர்பான அரசுத்துறை அலுவலர்களின் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
குடும்ப தகராறில் கணவனை கத்தியால் குத்தி கொன்ற மனைவி கைது
முன்னதாக சிவதாஸ் மீனா நிருபர்களிடம் கூறுகையில், தஞ்சாவூர் மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.1000 கோடி மதிப்பீட்டில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. அனைத்து பணிகளும் 2023 ஆம் ஆண்டுக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது வரை பாதி அளவிலான பணிகள் மட்டுமே முடிவடைந்துள்ளது. மாதம் ஒன்றுக்கு 30 கோடி ரூபாய் செலவு செய்ய வேண்டும் ஆனால், குறைவாகத்தான் செலவு செய்யப்படுகிறது. விரைவில் பணிகளை முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தோட்டத்தில் திருட வந்த வடமாநில இளைஞரை அடித்து கொன்று ஆற்றில் வீசிய 10 பேர் கைது
மாநகராட்சியில் சாலைகள் அமைக்கும் போது பழைய சாலையில் உள்ள தாரை பெயர்த்து விட்டு புதிய சாலையை அமைத்தால் தான் மழைக்காலங்களில் மழைநீர் அருகில் தாழ்வாக உள்ள கட்டிடங்களுக்குள் செல்லாது, எனவே அந்த வகையில் சாலைகள் அமைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார். தொடர்ந்து, தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலர் சிவதாஸ்மீனா, மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் பணி முன்னேற்றம் குறித்து கேட்டறிந்தார். பின்னர் வல்லம் தேர்வு நிலை பேரூராட்சியில் இயங்கி வரும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வுசெய்தனர்.
ஆய்வின் போது, பேரூராட்சிகள் ஆணையர் செல்வராஜ், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் இணை மேலாண்மை இயக்குநர் பிரதீப்குமார், மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார், பேரூராட்சிகள் திட்ட இணை இயக்குனர் மலையம்மான் திருமுடிகாரி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கடலூரில் 24 மணி நேரத்தில் சதம் அடித்த கொரோனா - இதுவரை 206 பேருக்கு பாசிட்டிவ்