தஞ்சாவூர் நியூ ஹவுசிங் யூனிட் அருகே அப்பகுதியின் அடையாளமாக திகழ்ந்து வந்த சுமார் 100 ஆண்டுகள் பழைமையான ஆலமரம், கடந்த அக்டோபர் மாதம் வேரோடு சாய்ந்து விழுந்தது. அப்பகுதி குடியிருப்புவாசிகள், மீண்டும் அதே இடத்தில் சுமார் 10 அடி உயரமுள்ள இரண்டு ஆலமரக் கன்றுகளை நட்டனர். இந்நிகழ்ச்சியில், எல்எல்ஏக்கள் துரை. சந்திரசேகரன் டிகேஜி நீலமேகம் (தஞ்சாவூர்) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதன் மூலம் ஆலமரம் மீண்டும் அப்பகுதியின் அடையாளமாக ஆகியிருக்கிறது.தஞ்சாவூர் புதுக்கோட்டை சாலையில் நியூ ஹவுசிங் யூனிட் (புதிய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு) பேருந்து நிறுத்தம் அருகே சாலையோரம் இருந்துவந்த ஆலமரம் காரணமாக ‘ஆலமர பஸ் ஸ்டாப்’ என்றே இன்றுவரை அழைக்கப்பட்டு வருகிறது. அந்த அளவுக்கு அது அப்பகுதியின் அடையாளமாகத் திகழ்ந்து வந்தது.
கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி காலை முதல் பலத்த கனமழை பெய்து வந்த நிலையில் நியூ ஹவுசிங் யூனிட் அருகே இருந்த ஆலமரம் அன்று மாலை 5 மணியளவில் வேரோடு சாய்ந்தது. இதில் ஆலமரத்தடியில் செயல்பட்டுவந்த டீக்கடை சேதமடைந்தது.அன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் டீக்கடை அதிகாலை முதல் நண்பகல் வரை மட்டுமே திறந்திருந்தது. பிற்பகலில் திறக்கப்படவில்லை. அதோடு, ஆலமர பஸ் ஸ்டாப்பிலும் பயணிகள் எவரும் இல்லை. அதனால் ஆலமரம் வேரோடு சாய்ந்தபோது, மூன்று பேர் லேசான காயம் ஏற்பட்டது. அதிஷ்டவசமாக யாருக்கும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. ஆலமரம் அடியோடு சாய்ந்ததற்கு டீக்கடைகாரர் தான் காரணம் என்று புகார் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்டது.
அப்பகுதியின் அடையாளமாக திகழ்ந்துவந்த ஆலமரம் வேரோடு சாய்ந்து ஒன்னரை மாதங்கள் ஆன நிலையில் அப்பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள், ஆலமர பஸ் ஸ்டாப் என்று பெயர் பெற்ற இந்த இடத்தில் மீண்டும் ஆலமரத்தை நட்டு, அப்பெயரை நிலை நிறுத்த வேண்டும் என்று முடிவ செய்தனர். இதைத் தொடர்ந்து, அப்பகுதி குடியிருப்புவாசிகள் சிலரின் தனிப்பட்ட முயற்சி காரணமாக அதே இடத்தில் தலா 10 அடி உயரமுள்ள இரண்டு ஆலமரக் கன்றுகள் எம்எல்ஏ-க்கள் துரை. சந்திரசேகரன், டிகேஜி நீலமேகம் ஆகியோர் முன்னிலையில் நடப்பட்டன. வேத விற்பன்னர்கள் வேதம் ஓத, சிறப்பு பூஜை செய்யப்பட்டு, தோட்டக்கலைத்துறை ஊழியர்களின் உதவியுடன் ஆல மரக் கன்றுகள் நடப்பட்டன.இதில் அப்பகுதியைச் சேர்ந்த ஆண்களும், பெண்களும், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இது குறித்து அப்பகுதியினர் கூறுகையில், தஞ்சாவூரிலேயே நுாறு ஆண்டுகள் பழமையான ஆலமரம் போதுமான பராமரிப்பு இல்லாததால், வேருடன் சாய்ந்தது. தஞ்சாவூர் மாநகருக்கு பெயர் பெற்றதாகும். வெயில் காலத்தில் வாகன ஒட்டிகள் இளைப்பாரும் இடமாகவும் இருந்து வந்தது. பல்வேறு காரணங்களால் ஆலமரம் விழுந்ததால், அப்பகுதியில் மீண்டும் ஆலமரத்தை நட்டு, தஞ்சாவூர் ஆலமரம் ஸ்டாப்பிங் என்று பழையபடி கொண்டு வரவேண்டும் என்ற நோக்கத்துடன், ஆலமரத்தை நட்டு வைத்துள்ளோம். எனவே, மாநகராட்சி நிர்வாகம், ஆலமரத்தின் அருகில் டீக்கடைகளையோ, பள்ளங்களையோ, கிளைகளை வெட்டக்கூடாது என்று கோரிக்கை விடுத்துள்ளார்.