டாஸ்மாக்கில் 10 ரூபாய் விவகாரம்; செய்தியாளரை தாக்கிய டாஸ்மாக் ஊழியரால் பரபரப்பு

விற்பனையாளர் முருகன் பாட்டில் உடைவது இறக்க கூலி போன்றவற்றிற்கு யார் காசு கொடுப்பது எனக் கூறிக் கொண்டிருக்கும்போதே, திடீரென செய்தியாளரின் செல்போனை பிடுங்கி அவரை தள்ளி விட்டு தாக்கியதாக கூறப்படுகிறது.

Continues below advertisement
டாஸ்மாக்கில் பத்து ரூபாய் கூடுதலாக விற்கப்படுவது குறித்து செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளரை தாக்கிய டாஸ்மாக் ஊழியரால் பரபரப்பு ஏற்பட்டது.
 
தமிழகம் முழுவதும் அரசு மதுபான கடைகளில் மது பாட்டில்கள் ஐந்து முதல் பத்து ரூபாய் வரை கூடுதலாக விற்கப்படுவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதுகுறித்த வீடியோவும் சமூக வலைதளங்களில் அடிக்கடி வைரலாக பரவி வருகிறது. அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள ஆலங்குடி மற்றும் நத்தம் அரசு மதுபான கடைகளில் பத்து ரூபாய் கூடுதலாக விற்கப்படுவதாக மது பிரியர்கள் குற்றச்சாட்டு எழுப்பி வந்தனர். இந்த நிலையில் இது குறித்து செய்தி சேகரிப்பதற்காக தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் சம்பந்தப்பட்ட ஆலங்குடி மற்றும் நத்தம் அரசு மதுபான கடைகளுக்கு சென்றுள்ளார். நத்தம் அரசு மதுபான கடையில் பத்து ரூபாய் அதிகமாக விற்கப்படுவது குறித்து அவர் மதுப் பிரியர்களிடம் கேட்டுவிட்டு இது குறித்து அந்த டாஸ்மாக் கடை ஊழியரிடமும் விசாரித்து விட்டு அடுத்ததாக ஆலங்குடியில் உள்ள அரசு மதுபான கடைக்கு சென்று உள்ளார்.

 
அப்போது ஆலங்குடி டாஸ்மாக் கடையில் பணியில் இருந்த விற்பனையாளர் முருகன் என்பவரிடம் செய்தியாளர் பத்து ரூபாய் அதிகமாக விற்கப்படுவது குறித்து தனது செல்போனில் வீடியோ எடுத்தபடி கேட்டுள்ளார். அப்போது அவரை புகைப்படம் எடுத்த விற்பனையாளர் முருகன் போலி செய்தியாளர் என்று குறிப்பிட்டு பேசுகிறார். அதற்கு செய்தியாளர் அடையாள அட்டையுடன் வந்திருக்கும் என்னை எப்படி போலி செய்தியாளர் என்று கூறுகிறீர்கள் என்று கேட்டுக் கொண்டே அவருக்கு பின்னால் வீடியோ எடுத்தபடி நடந்து செல்கிறார். அப்போது விற்பனையாளர் முருகன் பாட்டில் உடைவது இறக்க கூலி போன்றவற்றிற்கு யார் காசு கொடுப்பது எனக் கூறிக் கொண்டிருக்கும்போதே திடீரென செய்தியாளரின் செல்போனை பிடுங்கி அவரை தள்ளி விட்டு தாக்கியதாக கூறப்படுகிறது.

 
அதனை தொடர்ந்து செய்தியாளரான என்னை எப்படி தாக்கலாம் என்பது குறித்து அவர் கேட்கும் போது பதில் சொல்லாமல் அவர் கடைக்கு உள்ளே செல்கிறார். இதுகுறித்து மாவட்ட டாஸ்மாக் மேலாளர் பிரேம் சக்தி சுந்தரிடம் கேட்டபோது இது குறித்து உரிய விசாரணை செய்து கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
 

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

Continues below advertisement

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

Continues below advertisement
Sponsored Links by Taboola