பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவில் சர்வ தோஷ பரிகார தலமாகவும் பஞ்சபூதத் தலங்களில் பூமிக்குரிய தலமாகும் விளங்கி வருகிறது. இந்த கோவிலில் உள்ள கமலாம்பாள் சன்னதியில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு பத்து நாள் உற்சவ திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் கமலாம்மாள் தாயார் எழுந்தருளிய வீதி உலா நடைபெறும்.குறிப்பாக வெள்ளி ரிஷப வாகனத்தில் மனோன்மணி தாயார் எழுத்தருளிய வீதி உலா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த நிலையில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு திருவாரூர் தியாகராஜர் கோவிலில் உள்ள கமலாம்பாள் சன்னதியில் கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது. கொடியேற்றத்திற்கு முன்பாக கொடி மரத்திற்கு பால், தேன், இளநீர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கொடிமரத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு தீபாரதனை காண்பிக்கப்பட்டு கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது.




முன்னதாக கடந்த 28ஆம் தேதி ஆடிப்பூரத் திருவிழாவிற்கான பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நேற்று விநாயகர் வழிபாடு தல புனிதமாக்குதல் முளைப்பாலிகையிடுதல் ஆகியவை நடைபெற்ற பின்பு இன்று கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து நாளை கமலாம்பாள் கேடகத் திருவிழா கமலாம்பாள் இந்திர வாகனம் பூத வாகனம் வெள்ளி யானை வாகனம் கைலாச வாகனம் ஆகியவை அடுத்தடுத்த நாட்கள் நடைபெற்ற பின்பு வரும் 21 ஆம் தேதி கமலாம்பாள் திருத்தேரோட்டம் நடைபெற உள்ளது. இதனையடுத்து ஆடிப்புரத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கமலாம்பாள் ஆடிப்பூர தீர்த்தம் கோவிலுக்கு சொந்தமான கமலாலய குளத்தில் நடைபெற உள்ளது.தொடர்ந்து அன்று இரவு கமலாம்பாள் வீதி உலா நடைபெறும் என ஆலய நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த கொடியேற்ற நிகழ்வில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.




திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள தமிழகத்தின் பிரசித்திபெற்ற வைணவ  திருத்தலமான ராஜகோபால சாமி கோவிலில் ஆடிபூர திருவிழாவின் தொடக்கமாக இன்று கொடியேற்றம் நடைபெற்றது. முன்னதாக சேனை முதல்வர் நகர் சோதனை முடித்து சிம்மக்கொடி கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு மலர்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டது. பின்னர் தீட்சிதர்கள்  பூர்வாங்க பூஜைகள்  செய்து திருவாராதனம் எனும் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க மங்கள இசையுடன் கொடி மரத்தில் சிம்மகொடி ஏற்றப்பட்டது. பின்னர் செங்கமலத்தாயாருக்கு தீபாராதனை நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். ஆடிப்பூர திருவிழாவையொட்டி 10 நாட்கள் செங்கமலத்தயார் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார். ஆடிப்பூர திருவிழாவில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இம்மாதம் 22 ஆம் தேதி நடைபெற உள்ளது.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண