உதவி வேளாண் அலுவலர் மற்றும் உதவி தோட்டக்கலை துறை அலுவலர் பணியிடத்திற்கான எழுத்துத் தேர்வு இம்மாதம் (ஏப்ரல்)17,18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கின்றது. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த தேர்வினை எழுதுகின்றனர். www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in ஆகிய இணையதளங்களில் தேர்வுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு தற்போது பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.


காலை மற்றும் பிற்பகலில் என இரண்டு வேளைகளில் தேர்வு நடைபெறவிருக்கும் நிலையில், காலையில் நடைபெறும் தேர்வுக்கு 9:15 மணிக்கு பின்னர் தேர்வுக்கூடத்திற்கு வரும் தேர்வர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள். அதேபோல பிற்பகல் தேர்வுக்கு 2. 15 மணிக்கு மேல் தேர்வர்கள் தேர்வு கூடத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.