தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த புதிய விதியின்படி, மதம் சார்ந்த கூட்டங்கள், திருவிழாக்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள சதுரகிரி மகாலிங்க மலைக்கு ஆண்டுதோறும் அமாவசை நாட்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு செல்வது வழக்கம். நாளை அமாவசை என்பதால் பக்தர்கள் மலையின் மேல் அமைந்துள்ள சிவன் ஆலயத்திற்கு தரிசனத்திற்கு செல்ல ஆவலுடன் இருந்தனர்.




ஆனால், தமிழக அரசின் உத்தரவால் தரிசனம் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, மாவட்ட நிர்வாகத்திற்கு பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, வரும் 12-ந் தேதி( நாளை மறுநாள்) வரை காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை முகக்கவசம் அணிந்து செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.