கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தமிழகத்தில் மிகவும் வேகமாக பரவி வருகின்றது. கடந்த ஆண்டு மார்ச் மாதம், மக்களை ஆட்கொண்ட பயம் சற்றும் தணியாமல் ஓராண்டை கடந்து நகர்ந்து வருகின்றது. இந்நிலையில் நேற்று தமிழகத்தில் ஒரே நாளில் 5989 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதிகபட்சமாக தலைநகர் சென்னையில் 1977 பேருக்கு தொற்று உறுதியான நிலையில் கோவை மற்றும் செங்கல்பட்டு ஆகிய நகரங்களில் தொற்று எண்ணிக்கை 500ஐ கடந்துள்ளது.
நேற்று ஒரே நாளில் சென்னையில் 12 பேர் கொரோனாவிற்கு பலியான நிலையில் தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 23ஆக பதிவாகியுள்ளது. சென்னையை பொறுத்தவரை 14,382 பேர் தற்போது கொரோனாவிற்கான சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மேலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அமலுக்கு வந்துள்ளது.
சென்னை மெரினா கடற்கரையில் சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் மக்கள் கூட தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் தமிழகத்தில் இரவு 10 மணி வரை வழிபாட்டு தளங்கள் திறந்திருக்க அனுமதியும் அளிக்கப்பட்டுள்ளது.