தடகளப் போட்டியில் 23 ஆண்டு கால பி.டி.உஷாவின் சாதனையை தமிழக வீராங்கனை தனலட்சுமி தகுதிச்சுற்றில் முறியடித்தார். இதையடுத்து, அவருக்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், விளையாட்டு வானில் மீண்டும் ஒரு தமிழக நட்சத்திரம். தடகளப் போட்டிகளில் சாதனை மங்கையாக விளங்கும் திருச்சியைச் சேர்ந்த தனலட்சுமிக்கு வாழ்த்துகள். மின்னலென ஓடும் அவரது சாதனைச் சிறகுகள், அவரை மேலும் பல உயரங்களுக்கு அழைத்துச் செல்லட்டும் என பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தடகள வீராங்கனை தனலட்சுமிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து
ABP Tamil | 20 Mar 2021 03:08 PM (IST)
தடகளப் போட்டியில் பி.டி.உஷாவின் சாதனையை முறியடித்த தமிழக வீராங்கனை தனலட்சுமிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Dhanalaxmi