சட்டசபை தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகளுக்கு போட்டியாக தினகரனின் அ.ம.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சியும் 234 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. அக்கட்சியின் நெல்லை தொகுதி வேட்பாளராக பால்கண்ணன் என்பவர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.
வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று காலை முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அப்போது, பால் கண்ணனின் வேட்புமனுவை முன்மொழிந்த 10 நபர்களில் 3 நபர்கள நெல்லை மாவட்டத்தையே சேர்ந்தவர்கள் இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரது வேட்புமனுவை தேர்தல் அதிகாரிகள் நிராகரிப்பதாக அறிவித்தனர்.
பின்னர், பால் கண்ணனுக்கு மாற்று வேட்பாளராக வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ள ரமேஷ் கண்ணனின் வேட்புமனுவை அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர்.