நாடு முழுவதும் இன்று தேசிய தடுப்பூசி தினம் கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, மனித சமுதாயத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கோவிட் 19ன் பிடியிலிருந்து நம்மையும், நம்மைச் சார்ந்தவர்களையும் காத்துக் கொள்ள, எவ்வித தயக்கமும் இன்றி, அறிவியலின் கொடையான தடுப்பூசி போட்டுக் கொள்வோம். தவறாமல் முகக்கவசமும் அணிவோம். கொரோனாவை வெல்வோம் என்று பதிவிட்டுள்ளார். தமிழகத்தில் மீண்டும் சில நகரங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
எந்த தயக்கமும் இன்றி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வோம்- மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
ABP NADU | 16 Mar 2021 04:13 PM (IST)
எந்தவித தயக்கமும் இன்றி அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Stalin_1
Published at: 16 Mar 2021 03:59 PM (IST)