ஏப்ரல் மாதம் 6-ந் தேதி நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில், தி.மு.க. கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக மு.க.ஸ்டாலினும், அ.தி.மு.க. கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியும் களம் இறங்கியுள்ளனர். 
முதல்வர் வேட்பாளராக இருவருமே சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால், இருவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அ.தி.மு.க. முதல்வர் வேட்பாளராக களமிறங்கியுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த வாரமே தனது முதற்கட்ட பிரச்சாரத்தை தொடங்கிவிட்டார். 




இதையடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது இரண்டாம் கட்ட பிரச்சாரத்தை வரும் 18-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை மேற்கொள்ள உள்ளார். திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி ஆகிய மாவட்டங்களில் அ.தி.மு.க. வேட்பாளர்களையும், கூட்டணி கட்சி வேட்பாளர்களையும் ஆதரித்து இரண்டாம் கட்ட பிரச்சாரத்தை மேற்கொள்ள உள்ளார்.