தமிழகத்தை பொறுத்தவரை 1000க்கும் குறைவான அளவிலேயே கொரோனா தொற்று பதிவாகி வந்த நிலையில் அண்மைக்காலமாக மீண்டும் தொற்றின் அளவு வேகமெடுக்க தொடங்கியுள்ளது. நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 3446 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக தலைநகர் சென்னையில் 1290 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது.
செங்கல்பட்டு மற்றும் கோவை ஆகிய இடங்களில் தொற்று எண்ணிக்கை 300ஐ நெருங்கிவருவது மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் குறைந்த அளவில் தொற்று பதிவாகிவந்த நிலையில் நேற்று 147 பேருக்கு பெருந்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தஞ்சை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய இடங்களிலும் தொற்று எண்ணிக்கை 100ஐ கடந்துள்ளது.
அதிர்ச்சியளிக்கும் விதமாக நேற்று சென்னையில் கொரோனாவிற்கு பலியானோர் எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது. தமிழகம் முழுவதும் 14 பேர் நேற்று கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். தமிழகத்தில் இன்று மாலையோடு தேர்தல் பரப்புரை முடியும்பட்சத்தில் மீண்டும் லாக்டவுன் அறிவிக்கை வாய்ப்புகள் அதிகமுள்ளதாக கருதப்படுகிறது.