திமுக எம்பி ஆ.ராசா பிரச்சாரத்தின்போது, முதல்வரையும், திமுக தலைவர் ஸ்டாலினையும் ஒப்பிட்டு பேசியது சர்ச்சையானது. இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்களின் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளனர். இதையடுத்து, ராசா மீது அதிமுகவினர் தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகுவிடம் புகாரளித்தனர்.
இந்நிலையில், ஆ.ராசா மீது அதிமுகவினர் அளித்த புகாரின்பேரில், ஆபாசமாக திட்டுதல், கலகம்செய்ய தூண்டி விடுதல் மற்றும் தேர்தல் நடத்தை விதிகளை மீறுதல் ஆகிய 3 பிரிவின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.