கோவை மாவட்ட ஆட்சியராக உள்ள ராஜாமணி மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் சுமித் ஆகியோரை அதிரடியாக பணியிட மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் “புதிய ஆட்சியராக நாகராஜன் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் , காவல் ஆணையராக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் ஆணையம் தெரிவித்துள்ளது.