கொரோனா பரவலால் வெளியீடு தடைப்பட்ட படங்களில் ராணா டகுபதியில் காடன் திரைப்படமும் ஒன்று. கடந்த ஆண்டு ஏப்ரல் 20ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் ஊரடங்கு காரணமாக சுமார் ஓர் ஆண்டு இந்த படத்தின் வெளியீடு தடைபட்டது.

பிரபல இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் ஈரோஸ் இன்டர்நேஷனல் தயாரிக்க பிரமாண்டமாக உருவாகி உள்ளது காடன். ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் இந்த படம் உருவாகி உள்ளது. பிரபல நடிகர் விஷ்ணு விஷால் இந்த படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

A crazy journey of being a forest man! Here’s a sneak peek into @RanaDaggubati’s spectacular behind the scene moments from Aranya, Kaadan and Haathi
Mere Saathi!#4DAYSTOGO! pic.twitter.com/BzwXfZPRtV
— Rana Daggubati (@RanaDaggubati) March 22, 2021

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு கதையின் நாயகன் ராணா டகுபதி காடன் திரைப்படம் உருவான கதையை ஒரு சிறு ஸ்னீக் பீக் வாயிலாக தெரிவித்துள்ளார். ஸ்னீக் பீக்கில் உள்ள கர்ஜிக்கும் வசனங்கள் நிச்சயம் மக்கள் மத்தியில் பெரிய அளவில் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

OTT கலாச்சாரம் அமலில் உள்ள இந்த நேரத்தில் நேரடியாக திரையரங்குகளில் காடன் திரைப்படம் வெளியாக உள்ளது. மார்ச் மாதம் 26ம் தேதி படம் வெளியாக உள்ள நிலையில் படத்திற்கான முன்பதிவுகளும் தற்போது தொடங்கியுள்ளது.