உடல்நலக்குறைவால் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த்திற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவரது மனைவி வழி உறவினரான நடிகர் ஒய்.ஜி.மகேந்திரா நள்ளிரவில் காவேரி மருத்துவமனைக்கு வந்தார். அங்கிருந்த ரஜினியின் மகள்களிடம் அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்த அவர், சிறிது நேரம் கழித்து அங்கிருந்து காரில் புறப்பட்டார். அப்போது செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்,


‛ரஜினிகாந்த் நலமோடு இருக்கிறார். குடும்ப உறவினர் என்கிற முறையில்அவரை சந்தித்த நலம் விசாரக்க வந்தேன். அவரது மகள்களிடம் பேசினேன். அவரது உடல்நிலை குறித்து விளக்கினார். அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை. சிகிச்சை முடிந்து, அண்ணாத்த படம் ரிலீஸ் ஆகும் போது அவர் தியேட்டரில் இருப்பார்,’ என்றார். 


ரஜினிகாந்திற்கு நடந்து வரும் சிகிச்சை தொடர்பான விபரம் இதோ...


சென்னையில் ஆழ்வார்பேட்டையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு முழு உடல் பரிசோதனை மற்றும் உறுப்புகள் செயல்பாடுகள் குறித்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனையின் முடிவில் அவருக்கு ரத்த நாள திசு அழிவு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளதாம். இதனைத்தொடர்ந்து, ரஜினிக்கு நரம்பியல் மற்றும் இருதய துறை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே சிறுநீரக மாற்று சிகிச்சை செய்துள்ளா நிலையில் மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இதுவரை ரஜினிகாந்த் உடல்நிலை தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் எந்தவொரு தகவலும் வெளியிடவில்லை என்று குறிப்பிடத்தக்கது.


முன்னதாக வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக நடிகர் ரஜினிகாந்த் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது மனைவி லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 


இதுதொடர்பாக லதா ரஜினிகாந்த்திடம் இது தொடர்பாக கேட்டபோது ரெகுலர் மாஸ்டர் செக்கப்பிற்காகவே காவிரி மருத்துவமனைக்கு ரஜினி வந்திருக்கிறார் என ABP நாடு செய்தி நிறுவனத்திற்கு லதா ரஜினிகாந்த் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.  ரஜினிகாந்த்  நலமாக இருக்கிறார்  என்றும் லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். மேலும் ரஜினிக்கு ஒவ்வொரு ஆண்டும் முழு உடல் மருத்துவ பரிசோதனை செய்வது வழக்கம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


 






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண