”ராயல் சல்யூட் JAWAN” வீரமரணம் அடைந்த இந்திய வீரர்! யார் இந்த முரளி நாயக்?
இந்தியா பாகிஸ்தான் போருக்கு நடுவில் பாகிஸ்தான் தாக்குதலில் வீரமரணம் அடைந்திருக்கிறார் இந்திய ராணுவ வீரர் முரளி நாயக். யார் இவர்? எப்படி இந்த தாக்குதல் நடந்தது என்பதை பார்ப்போம்.
இந்தியா ஆபரேஷன் சிந்தூர் மூலம், பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து, அங்கிருந்த 9 பயங்கரவாதி முகாம்களை தாக்கி அழித்தது. இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் எல்லையோர கிராமங்களில் இந்திய மக்கள் மீது தாக்குதல் நடத்தியது. மேலும், இன்று ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதலையும் பாகிஸ்தான் மேற்கொண்டது. அவற்றை இந்திய ராணுவம் முறியடித்து தோல்வி அடைய செய்தது. இதில், அதிநவீன S 400 வான்வழி பாதுகாப்பு அமைப்பை பயன்படுத்தப்பட்டது. இப்படி இந்தியாவிற்கும் பாகிஸ்தனிற்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது.
இச்சூழலில் தான் ஜம்மு - காஷ்மீரில் உள்ள Line of Control - ல் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் ராணுவ வீரர் முரளி நாயக் உயிரிழந்துள்ளார். சிறுவயதிலேயே ராணுவத்தின் மீது அதீத ஈடுபாடு கொண்டவரான முரளி நாயக் ஆந்திர மாநிலம் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டம் கல்லிதண்டா என்ற கிரமத்தைச் சேர்ந்தவர். ஸ்ரீராம் நாயக் மற்றும் ஜோதி பாய் ஆகியோரின் ஒரே மகன் தான் இந்த முரளி நாயக். மகன் சிறுவயதில் இருந்து இந்திய ராணுவத்தில் சேரவேண்டும் என்று ஆசையுடன் இருந்ததால் இவரது தாய் தந்தையும் அதற்கு பச்சைக்கொடி காட்டினார்கள். இதனைத் தொடர்ந்து இந்திய ராணுவத்திலும் இணைந்து பணியாற்றியிருக்கிறார். இச்சூழலில் தான் இந்தியா - மற்றும் பாகிஸ்தனுக்கு இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் வீர மரணம் அடைந்துள்ளார்.
இவரது மறைவிற்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார். அதில்,”இந்த வீரத் தியாகி முரளி நாயக்கிற்கு நாங்கள் மனமார்ந்த அஞ்சலி செலுத்துகிறோம். இந்த மகத்தான இழப்பின் போது துக்கத்தில் இருக்கும் அவரது குடும்பத்தினருக்கு எங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். அவரது தியாகம் என்றென்றும் எங்கள் நினைவுகளில் ஆழ்ந்த நன்றியுடனும் மரியாதையுடனும் பொறிக்கப்படும்”என்று கூறியுள்ளார்.