ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானுக்கு மட்டும் இல்லாமல் உலக நாடுகளுக்கே இந்தியா தெளிவான மெசேஜ் சொல்லி இருக்கிறது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஒரே நேரத்தில் 9 வெவ்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தி பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா பதிலடி அளித்தது. அதற்கு பழிவாங்கும் நோக்கில் மேற்கு மற்றும் வடக்கு எல்லைப்பகுதிகளில் பாகிஸ்தான் அனுப்பிய ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை துல்லியமாக இடைமறித்து தாக்கி அழித்திருக்கிறது இந்தியா. தன்னுடைய வான் எல்லையை தற்காத்து கொண்டது மட்டும் அல்லாமல் மொத்த கன்ட்ரோலும் தன்னிடம் இருப்பதை பாகிஸ்தானுக்கு மட்டும் அல்லாமல் உலக நாடுகளுக்கே இந்தியா, இதன்மூலம் தெரிவித்திருக்கிறது.
விரைவாகவும் முப்படைகளையும் ஒருங்கிணைத்து மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலுக்கு பின் இருக்கும் தயார் நிலை ஒரு நாளில் சாதிக்கப்பட்டவை அல்ல. கடந்த 25 ஆண்டுகளில், இந்தியாவின் பாதுகாப்பை வலுப்படுத்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசும், தேசிய ஜனநாயக கூட்டணி அரசும் எடுத்த நடவடிக்கைகளின் விளைவாக அமைந்துள்ளது.
இந்தியா பயன்படுத்திய ஆயுதங்கள்:
பாகிஸ்தான் நடத்திய தாக்குதல்களில் இருந்து இந்தியாவை பாதுகாத்ததில் பல ஆயுதங்கள் முக்கிய பங்கு வகித்தன. குறிப்பாக, ஆளில்லா விமானங்களை அடையாளம் கண்டு தாக்கி அழிக்கும் Integrated Counter-UAS (Unmanned Aircraft System) Grid (ட்ரோன்கள்), S 400 triumf system (ரஷியாவிடம் இருந்து வாங்கப்பட்ட ஏவுகணைகள்), Barak 8 (இந்தியா - இஸ்ரேல் இணைந்து உருவாக்கிய ஏவுகணைகள்), Akash (DRDO தயாரித்த உள்நாட்டு ஏவுகணை), ஆளில்லா விமானங்களை அடையாளம் கண்டு தாக்கி அழிக்கும் தொழில்நுட்பம் (DRDO தயாரித்தவை) ஆகியவை பெரிய அளவில் பயன்பட்டன.
தன்னை தற்காத்துக் கொண்டது மட்டும் இல்லாமல் விரைவாகவும் துல்லியமாகவும் தாக்குதல் நடத்தி இருக்கிறது இந்தியா. பாகிஸ்தான் மண்ணில் புகுந்து லாகூரில் வைக்கப்பட்டிருந்த சீனாவின் HQ-9 ஏவுகணைகளை தாக்கி அழித்தது. முக்கியான ரேடார் அமைப்புகளை காலி செய்துள்ளது.
இந்தியா சொல்ல வரும் மெசேஜ் என்ன?
தயாராக இருந்து இந்தியா திருப்பி அடித்தது ஒரு நாள் இரவில் நடந்தது அல்ல. கடந்த 25 ஆண்டுகளாக இந்திய வான் பாதுகாப்பு அமைப்பினை பலப்படுத்த இந்திய அரசு மேற்கொண்டு நடவடிக்கைகளே காரணம்.
கடந்த 2018ஆம் ஆண்டு, ரூ. 35,000 கோடி மதிப்பில் ரஷியாவிடம் இருந்து S 400 triumf system (நிலத்தில் இருந்து வானில் தாக்கி அழிக்கும் ஏவுகணை) 5 ஸ்க்வாட்ரான்களை இந்தியா வாங்க ஒப்பந்தம் மேற்கொண்டது. அதில், 3 ஸ்க்வாட்ரான்களை பாகிஸ்தான், சீன நாடுகள் உடனான எல்லையில் இந்தியா நிலைநிறுத்தியுள்ளது.
Barak 8 எனப்படும் நிலத்தில் இருந்து வானுக்கு சென்று தாக்கும் மீடியம் ரேஞ் ஏவுகணைகளை (MR-SAM) கடந்த 2017ஆம் ஆண்டு, மேற்கொண்ட ஒப்பந்தத்தின் மூலம் இஸ்ரேலிடமிருந்து இந்தியா வாங்கியது. 2.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான Barak 8 ஏவுகணைகள்தான், பஞ்சாப் பதிண்டா முன்கள ராணுவ தளத்தை பாதுகாக்க பயன்படுத்தப்பட்டது.
உள்நாட்டில் DRDO எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் தயாரிக்கப்பட்ட Akash ஏவுகணைகளும் ட்ரோன்களை தாக்கி அழிக்கும் ஏவுகணைகள்.
தன்னுடைய வான் எல்லையை தற்காத்து கொண்டது மட்டும் அல்லாமல் மொத்த கன்ட்ரோலும் தன்னிடம் இருப்பதை ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானுக்கு மட்டும் அல்லாமல் உலக நாடுகளுக்கே இந்தியா தெரிவித்திருக்கிறது.