தமிழ்நாட்டில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திருப்பத்தூர் மாவட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அமர் தெரிவித்துள்ளார். 


தமிழகம் முழுவதும் பரவாலாக கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த ஒரு வார காலமாக  கன மழையால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.குறிப்பாக திருப்பத்தூர் மாவட்டத்தில் மழை அதிகமாக பெய்து வருவதால் மாவட்ட ஆட்சியர் அமர்  பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளார்.