Marriage Certificate: இந்தியாவே டிஜிட்டல் மையத்தினை நோக்கிச் சென்று கொண்டு இருக்கையில், தமிழ்நாடு அரசு மக்கள் நலத்திட்டங்களுக்கு விண்ணப்பங்களைப் பெறுவதோ, அல்லது ஏற்கனவே மக்களின் பயன்பாட்டிற்கு தேவைப்படக் கூடிய அரசு சான்றிதழ்களைப் பெற ஆன்லைனில் விண்ணப்பங்களை பெற ஏற்கனவே பல வழிமுறைகளை அறிவுருத்தியுள்ளது. ஆனாலும்  அரசு அலுவலகங்களில் இன்று வரை பொது மக்கள் நடையாய் நடந்த வண்ணம் உள்ளனர்.

  


ஆனால் இன்றைக்கு வீட்டுக்கு ஒரு செல்போன் என்பது பெரும்பாலும் இருக்கிற சூழலில் தான் நாம் இருக்கிறோம். அதிலும் குறிப்பாக கொரோனா காலகட்டத்தின் போது பெரும்பாலானோர் தங்களின் வீட்டு குழந்தைகளின் கல்விக்காக  வாங்கியவர்கள் ஏராளம். ஆனாலும், ஆன்லைனில் விண்ணப்பங்களை விண்ணப்பிக்க பொது மக்கள் தயாராக இருந்தாலும், அரசு அதிகாரிகள் சம்பந்தப்பட்டவர்களை நேரில் அழைத்து ஒரு சான்றிதழுக்கு குறைந்த பட்சம் ரூபாய் 500 வரை லஞ்சம் பெறுவருவதாக துறை மேல் அதிகாரிகளுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் புகார்கள் வந்துள்ளன. 


இதனை தடுக்கவும், பொது மக்களுக்கு அளைச்சலின்றி தங்களின் தேவைக்கான சான்றிதழ்களைத் தரவும், தமிழ்நாடு அரசு பதிவுத்துறை புதிய உத்தரவினை பிறப்பித்துள்ளது. அதில், திருமணச் சான்றிதழ்கள் மற்றும் வில்லங்க சான்றிதழகள் கேட்டு விண்ணப்பிக்கும் பொது மக்களை நேரடுயாக அலுவலகத்துக்கு அழைக்கக்கூடாது எனவும், சான்றிதழ் தொடர்பாக அனைத்தும் ஆன்லைனில் தான் நடைபெற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சொத்து விற்பனை மற்றும் பங்கீட்டு பத்திரப் பதிவு பணிகள் அனைத்தும் ஆன்லைனுக்கு தமிழ்நாடு அரசு மாற்றியுள்ளது. இந்த முறை 2019 ஆம் ஆண்டு முதலே நடைமுறையில் உள்ளது. தமிழ்நாடு அரசு கொண்டு வந்த இந்த ஆன்லைன் முறைக்கு பொது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தாலும், சான்றிதழ் பிறப்பிக்கும் ஆவண எழுத்தர் அலுவலகங்களில் ஒரு விண்ணப்பத்திற்கு ரூபாய் 200 முதல் 400 வரை லஞ்சம் பெறப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதனை தடுக்க துறை சார்ந்த உயர் அதிகாரிகள் எடுத்த நடவடிக்கையின் அடிப்படையில், இனிமேல் திருமணச் சான்று, வில்லங்கச் சான்று போன்ற சான்றிதழகளுக்கான விண்ணப்பங்களை ஆன்லைனில் தான் பெற வேண்டும்.  தற்போது திருமண சான்று, வில்லங்க சான்று ஆகியவற்றுக்கான மனுக்களை, ஆன்லைன் முறையில் மட்டுமே பெற வேண்டும் என, பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது. திருமண சான்று, வில்லங்க சான்று தேவைப்படுவோர், பதிவுத்துறையின் இணையதளத்தில் உள்ள சான்றிதழ் பக்கத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர் அளிக்க வேண்டிய ஆவணங்கள், சான்று, விபரங்கள் குறித்த பட்டியலை விரிவாக வெளியிட வேண்டும்.
விண்ணப்பம், இணைப்பு ஆவணங்கள், கட்டணங்கள் போன்றவற்றை இணையதளம் வாயிலாகவே மேற்கொள்ள வேண்டும். இந்த விண்ணப்பங்கள் தொடர்பாக கூடுதல் தகவல்கள், ஆவணங்கள் ஏதேனும் தேவைப்பட்டால், சம்பந்தப்பட்ட சார் - பதிவாளர்கள், ஆன்லைன் வாயிலாகவே விண்ணப்பதாரரிடம்  கேட்டு பெற வேண்டும். பரிசீலனை முடிந்த நிலையில் சான்றுகளை, மக்கள் ஆன்லைன் முறையிலேயே பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும் எனவும் அறிவுருத்தப்பட்டுள்ளது. 


மேற்குறிப்பிட்ட இரண்டு சான்றுகளையும் அதாவது, திருமணச் சான்றிதழ் மற்றும் வில்லங்கச் சான்றிதழ், சான்றிதழுக்கான   விண்ணப்பம் பதிவான நாளில் இருந்து, மூன்று நாட்களுக்குள் விண்ணப்பதாரருக்கு வழங்க வேண்டும். தாமதம் ஏற்பட்டதாக புகார் வந்தால், சம்பந்தப்பட்ட அலுவலர் மீது,  துறை சார்ந்த  ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதுடன் அபராதமும்  விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமணச் சான்றிதழ் மற்றும் வில்லங்கச் சான்றிதழ் பெறுவதற்கான பதிவுத்துறையின் இந்த உத்தரவு பொது மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக உள்ளது என பலர் தெரிவித்து வருகின்றனர்.