திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம்

கார்த்திகை தீப திருநாளில் திருப்பரங்குன்றம் முருகன் கோயில் பின்புறம் உள்ள மலை உச்சியில் தீபம் ஏற்ற  அனுமதிக்க வேண்டும் என இந்துத்துவ அமைப்பை சேர்ந்தவர்கள், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மலையில் தீபம் ஏற்ற அனுமதி தந்தார். ஆனால் இதற்கு தமிழக அரசு அனுமதி மறுத்தது. மேலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசு மேல்முறையீடு செய்த நிலையில், இன்று மதுரை நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து மீண்டும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்த போது திருப்பரங்குன்றம் மலையில் இன்றே தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்டார். 

Continues below advertisement

தனி நீதிபதி உத்தரவு- தமிழக அரசு மீண்டும் அனுமதி மறுப்பு

இதற்கான பாஜக மற்றும் இந்து அமைப்பினர் கூடிய நிலையில், தமிழக அரசு மறுப்பு தெரிவித்தது. நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதால் அனுமதி மறுக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழக அரசின் தரப்பு விளக்கத்தை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். கார்த்திகை தீபம் என்பது தமிழர்கள் திருவிழா, இந்துத்துவாவிற்கு இதில் எந்த தொடர்பும் இல்லை. தற்போது திடீரென கார்த்திகை தீபம் தொடர்பாக பிரச்சனை எழுப்பியுள்ளனர்.நீதிமன்றத்தை அனுகி தீபம் ஏற்றுவது தொடர்பாக உத்தரவை வாங்கியுள்ளனர். ஆனால்  ஒன்றை மறந்து விட்டனர். 2014ஆம் ஆண்டு நீதிபதிகள் சுப்புராயன், கல்யாண சுந்தரம் கொண்ட அமர்வு தீபம் ஏற்றுவது தொடர்பாக தீர்ப்பு தரப்பட்டுள்ளது.

எந்த இடத்தில் இதுவரை தீபம் ஏற்றப்பட்டதோ அதே இடத்தில் ஏற்ற வேண்டும் என தீர்ப்பு வந்துள்ளது. ஆனால் அதனை புரிந்து கொள்ளாதவர்கள், அதை அரிந்து கொள்ளாதவர்கள், தற்போது ஏதோ புதிதாக ஒன்றை கண்டிபிடித்தது போல நேற்றைய தினம் நீதிமன்றத்தை அனுகி அனுமதி கேட்டு நீதிபதியிடம் முறையிட்டுள்ளனர். அதற்கு தனி நீதிபதியும் தீர்ப்பு தந்துள்ளார். நாங்கள் சட்டத்தை மதிப்பவர்கள், நீதிக்கு தலை வணங்குபவர்கள் நாங்கள், எங்களைப்போல சட்டத்தை மதிப்பவர்கள் யாரும் இல்லை, சட்டத்தின் ஆட்சி தமிழ்நாட்டில் நடைபெற வேண்டு என விரும்புபவர் எங்கள் முதலமைச்சர், 

Continues below advertisement

தமிழக அரசு மறுத்ததற்கு காரணம் என்ன.?

2014 ஆம் ஆண்டு இரண்டு நீதிபதிகள் டிவிசன் பெஞ்ச் தீர்ப்பு தந்துள்ளனர். அந்த தீர்ப்பு மீது மேல்முறையீடு செய்யாமலோ, ரத்து செய்யாமலோ புதிதாக தனி நீதிபதி வைத்து தீர்ப்பு வாங்கி கொண்டு வந்து விட்டால் எப்படி அனுமதிக்க முடியும். அப்படி அனுமதித்தால் தமிழக அரசு மீது என்ன குற்றச்சாட்டு வரும். எனவே 2014 தீர்ப்பின் படி தமிழக அரசு நடந்து கொண்டுள்ளது. நீதிமன்றம் அனுமதி தந்த பிறகும் அரசு மறுப்பது ஏன் என செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்தவர், 2014ஆம் ஆண்டு மறந்து விட்டு பேசுகிறார்கள், 2014 ஆம் ஆண்டு தீர்ப்பின் படி எந்த வழக்கு தொடரவும் அரசுக்கு உரிமை உண்டு. 2014ஆம் ஆண்டு தீர்ப்பை பார்க்காமல், படிக்காமல் அப்படி தீர்ப்பு உள்ளதை மறைத்து புது கதையை கட்டி விட்டு போகிறார்கள். தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள். மத ஒற்றுமை, மத நல்லினக்கை, இன்றைக்கும் நிருபித்துக்கொண்டுள்ளோம். 

 

தமிழக அரசு மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்துள்ளது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்தவர், தள்ளுபடி தொடர்பாக சட்டத்துறை மூலமாக அராய்ந்து நவட்டிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். தீபம் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கருத்திற்கு பதில் அளித்தவர், இபிஎஸ்க்கு வேறு வேலை இல்லை. தமிழக அரசு மீது குற்றச்சாட்டு சொல்வது தான் அவரது பணி, தமிழக அரசுக்கு ஆதரவாக நிற்க வேண்டியவர், இந்துத்துவாவிற்கு ஆதரவாக உள்ளார் என அமைச்சர் ரகுபதி கடுமையாக விமர்சித்தார்.