கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி, சேலம், தென்மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில்  மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.


இதுதொடர்பாக வானிலை மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்ட அறிக்கை:


தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழ்நாட்டில் இன்று மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் (கோயமுத்தூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி), சேலம், தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவக் கூடும்.




29.07.2021 & 30.07.2021: மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (கோயமுத்தூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி), மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவக் கூடும்.


31.07.2021 & 01.08.2021 வரை கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவக் கூடும்.






 


சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடனும், அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.


கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை அளவு (சென்டிமீட்டரில்):


பந்தநார் வட்டாட்சியர் அலுவலகம் (நீலகிரி) 7, ஆத்தார் (சேலம்) 3, நடுவட்டம் (நீலகிரி), வேதாரண்யம் (நாகப்பட்டினம்), தேவலா (நீலகிரி), முத்துப்பேட்டை (திருவாரூர்), சின்னக்கல்லார் (கோவை), வாழப்பாடி (சேலம்), அவலாஞ்சி (ரீலகிரி), சோலையார் (கோவை), வால்பாறை PTO (கோவை ) தலா 2.


மீனவர்களுக்கான எச்சரிக்கை :


வங்க கடல் பகுதிகள்:


28.07.2021 முகல் 29.07.2021வரை: வடமேற்கு மற்றும் மத்திய வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.


28.07.2021 முகல் 01.08.2021வரை: தென் மேற்கு, வடக்கு மற்றும் மத்திய அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.


Whatapp-இல் புதிய அம்சம், QR code ஸ்கேன் பண்ணாலே இப்படி நடக்குமா? வாவ்..!