ஒருவரின் மொபைல் நம்பர் வாங்காமலேயே அல்லது கேட்காமலேயே ஒருவரால் அவரின் வாட்ஸ் அப் அக்கவுண்டில் உங்களை ஒரு Contact  ஆக  வாட்ஸ் அப் QR code  மூலம் சேர்க்க முடியும்.


வாட்ஸ் அப் என்பது உலகம் முழுவதும் பல பில்லியன்கணக்கான மக்கள் பயன்படுத்தும் செய்திப் பரிமாற்ற செயலியாகும். இதன் மூலம் தனி நபர்களுக்கோ அல்லது குழுக்களுடனோ ஒரு செய்தியினை பகிர்ந்துக்கொள்ளமுடியும். பயனர்களின் வசதிக்காக பல்வேறு அம்சங்களை வழங்கி வரக்கூடிய வாட்ஸ்-அப் நிறுவனம் சமீபத்தில் கியூஆர் கோடு (QR code) அம்சத்தை அறிமுகம் செய்திருந்தது. ஆனால் இதுவரை கியூஆர் கோடு (QR code) என்றால் மொபைலிலிருந்து லேப்டாப் அல்லது கம்யூட்டரில் வாட்ஸ்அப் வெப்பினை ஓபன் செய்வதற்கு பயன்படுத்துவார்கள் என்பது தெரியும். ஆனால் தற்பொழுது அறிமுகம் செய்துள்ள  கியூஆர் கோடினை (QR code) சரியாக பயன்படுத்துவது குறித்து பயனர்களுக்கு தெரிவதில்லை என்பது தான் உண்மை. இந்த வாட்ஸ் அப் கியூஆர் கோடு (QR code) மூலம் ஒருவரின் மொபைல் நம்பரை வாங்காமலேயே அல்லது கேட்காமலேயே அவரின் வாட்ஸ் அப் அக்கவுண்டில் எளிதாக சேமிக்க முடியும் என்பது பற்றிய தகவல்களுககு உங்களுக்கு தெரியுமா? இதுவரை தெரியாவிடில் தற்பொழுது இதனை எப்படி மேற்கொள்வது எனத் தெரிந்துக்கொள்வோம்.



முதலில்,வாட்ஸ் அப்பில் கியூஆர் கோட் குறியீட்டினைக் கண்டறிய வேண்டும் எனில், உங்களது ஸ்மாரட்போனில், வாட்ஸ் அப்பினைத் திறக்கவும்.


பின்னர் வாட்ஸ் அப் ஸ்க்ரீனின் மேல் வலதுபுறத்தில் இருக்கும் மூன்று செங்குத்தான புள்ளிகளை கிளிக் செய்யவும். பின்னர் அதில் settings ஐ கிளிச் செய்தால், உங்களது பெயருக்கு அடுத்ததாக கியூஆர் கோடு (QR code) இருக்கும். இதனை கிளிக் செய்தால் இந்த வாட்ஸ் அப் காண்டாக்டில் புதிய காண்டாக்டை எளிதாக சேமிக்க முடியும். மேலும் ஒரு குழுவில் ஒருவரைச் சேர்க்க அல்லது ஒரு சாட்-ஐ தொடங்க உங்களை அனுமதிக்கும். குறிப்பாக இந்த க்யூஆர் கோட் ரீசெட் செய்யப்படும் வரை அல்லது உங்கள் வாட்ஸ்அப் அக்கவுண்ட் நீக்கப்படும் வரை இது காலாவதியாகாது என்பது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில், ஒருவேளை நமக்க தெரியாமல் நம்முடைய மொபைல் எண்ணினை ஒருவர்  வாட்ஸ் அப்  கியூஆர் கோடு (QR code) எடுத்திருந்தால் இதனை ரீசெட் செய்தால் சரிசெய்துவிடாமலாமா? என்ற கேள்வி எழும். ஆம். நாம் நம்முடைய வாட்ஸ் அப் கியூஆர் கோடினை ரீசெட் செய்தால் நிச்சயம் சரி செய்துவிடாலம். எப்படி என்பது குறித்து இங்கே தெரிந்துகொள்வோம்.






உங்கள் ஸ்மார்ட்போனில் வாட்ஸ்அப்பைத் திறக்கவும்,  ஸ்க்ரீனின் மேல் வலதுபுறத்தில் இருக்கும் மூன்று செங்குத்தான புள்ளிகளைத் தட்டவும்
செட்டிங்ஸ்-ஐ கிளிக் செய்யவும். பின்னர் உங்கள் பெயருக்கு அடுத்ததாக இருக்கும் QR கோட் ஐகானை கிளிக் செய்யவும்.
இப்போது, ஸ்க்ரீனில் மேல் வலதுபுறத்தின் ஓரத்தில் உள்ள மூன்று செங்குத்தான புள்ளிகளை மீண்டும் கிளிக் செய்யவும்.
இப்போது "ரீசெட் QR கோட்? ஏற்கனவே இருக்கும் க்யூஆர் கோட் இனி வேலை செய்யாது" என்கிற தகவலுடன் Keep மற்றும் Reset என்கிற இரண்டு விருப்பங்கள் உங்களுக்கு கிடைக்கும்.  அதில் Reset-ஐ கிளிக் செய்யதவுடன, புதிய க்யூஆர் கோட் பெற்றத்துக்கான தகவல் உங்களுக்கு கிடைக்கும். நீங்கள் இதுப்போன்று செய்வதன் மூலம்  முன்னதாக அனுப்பட்ட இன்வைட் இணைப்புகள் (invite links) க்யூஆர் கோட்-ஐ ரீசெட் செய்த பின்னர் இயங்காது என்பதனையும் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும்.