தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக ஒரு சில இடங்களில் குளிர் தாக்கம் சற்று குறைந்து காணப்பட்டது. அத்துடன் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் தென்பட்டது. இந்நிலையில் இன்று இரவு முதல் சனிக்கிழமை வரை சென்னையில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். 


இது தொடர்பாக அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்துள்ளார். அதில், “இன்று இரவு முதல் சனிக்கிழமை வரை சென்னை மற்றும் அதன் சுற்ற வட்டார பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய கூடும். அதைத் தொடர்ந்து வரும் 31ஆம் தேதி முதல் சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் 4 முதல் 5 நாட்களுக்கு குளிர் சற்று அதிகமாக காணப்படும். 






அதேபோல் டெல்டா மாவட்டங்கள் முதல் தூத்துக்குடி வரை வரும் சனி மற்றும் ஞாயிறு காலை வரை நல்ல மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. இவை தவிர ஒரு சில இடங்களில் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது ” எனத் தெரிவித்துள்ளார். 


மேலும் படிக்க: பள்ளிகள் திறப்பு இப்போது அவசியமா? ஆபத்தா?- தொற்றுநோய் மருத்துவர் பேட்டி