தென்மேற்கு பருவ காற்று காரணமாக தமிழ்நாட்டில், நீலகிரி, கோயமுத்தூர், மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களான தேனி, திண்டுக்கல், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்கள்களில் ஒரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். எஞ்சிய மாவட்டங்களில் வானம் மேகமூட்டமாக காணப்படும் என சென்னை மண்டல வாணிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோயமுத்தூர், நீலகிரி மாவட்டங்களில் உள்ள மலைப்பகுதிகலில் ஓரிரு இடங்களில் மண்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ள வானிலை ஆய்வு மையம், நாளையதினம் கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்கலில் கனமழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெயக்கூடும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவக்கூடும்
ஜூலை 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்கள் மற்றும் வடமாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும்
ஜூலை 27ஆம்ன் தேதி நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவக்கூடும்
சென்னயை பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் பொதுவாக மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழைப்பெயக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதுடன், அதிகபட்ச வெப்ப நிலை 34 மற்றும் குறைந்த பட்ச வெப்பநிலை 26 டிகிரியாக இருக்கும் என தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 16 செ.மீ, நடுவட்டம் 14 செ.மீ, மேல்பவானி 13 செ.மீ, தேவாலா 10 செ.மீ, குந்தா பிரிட்ஜ் 9 செ.மீ, கோவை மாவட்டம் வால்பாறை 12 செ.மீ, சின்னக்கல்லார் 11 செ.மீ, தேனி மாவட்டம் பெரியாறு 10 செ.மீ, தேக்கடி 6 செ.மீ, பெரம்பலூர் அகரம் சீகூர் 4 செ.மீ, தென்காசி 3 செ.மீ, கன்னியாகுமரி மாவட்டம் மையிலாடி 2 செ.மீ மழை பதிவாகி உள்ளது.
இன்று முதல் வரும் 24ஆம் தேதி வரை தமிழக கடலோரம், தெற்கு வங்கக்கடல், மத்திய வங்கக்கடல், மன்னார் வளைடா மற்றும் ஆந்திர கடலோர பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வரையும் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தபப்ட்டுள்ளது.
இன்று முதல் 27ஆம் தேதி வரை அரபிக்கடல் பகுதிகளான கர்நாடகா, கேரளா, லட்சத்தீவு, தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்றானது 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்றுவீசும் என்பதால் மீனவர்கள் மேற்கட்ட தேதிகளில் அரபிக்கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.