வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் வட தமிழக கடலோர பகுதியில் நிலைக்கொண்டிருந்தது.
இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து சென்னை அருகே கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது.
அதன்படி, வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே கடந்த 19-ஆம் தேதி அதிகாலை முதல் கரையை கடக்கத் தொடங்கி காலை 7 மணியளவில் கரையை கடந்தது.
மேலும், திருச்சி, நீலகிரி, கோவை, திருப்பூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்தது.வட கடேலோர மாவட்டங்களில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை கொட்டித்தீர்த்தது.
இதனையடுத்து கடந்த இரண்டு நாள்களாக தமிழ்நாட்டில் மழை சற்று ஓய்ந்திருந்தது. இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் அடுத்த மழை குறித்து கூறுகையில், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, சேலம், திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது.
கோவை, கிருஷ்ணகிரி, ஈரோடு, பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. அதேபோல் டெல்டா மாவட்டங்களில் நாளையும், நாளை மறுநாளும் கனமழை பெய்யும். தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் நவம்பர் 24, 25-ஆம் தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது” என தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: திருவாரூரில் தொடர் கனமழை - மேலும் 10,000 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின
கனமழை காலத்தில் மின்னல், இடியிலிருந்து தற்காத்து கொள்வது எப்படி? பேரிடர் மேலாண்மை அட்வைஸ் இதோ!
ரயில்வே ஆலோசனைக் கூட்டத்தில் வைகோ, சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்பு !
Sivagangai: உரத்தட்டுப்பாடு... நடவடிக்கை எடுக்காத அரசு... கொந்தளிக்கும் விவசாயிகள் நேரடி ரிப்போர்ட்