குமரிக்கடல் மற்றும் அதைஒட்டிய இலங்கை கடற்பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழையும், தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.




இதர கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், உள்மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை கனமழையும், தென் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். சென்னையில் அடுத்த 48 மணிநேரத்தில் நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.


மேலும் படிக்க : Today Headlines: மிக கனமழை அபாயம்.. பரபரப்பான கட்டத்தில் கான்பூர் டெஸ்ட்..சில முக்கியச் செய்திகள்!


இலங்கை அருகே நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். அந்தமான் கடல் பகுதியில் நாளை புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது மேலும் வலுப்பெற்று மேற்கு, வடமேற்கு திசையில் நகரக்கூடும். இதன் தாக்கத்தால் தமிழகத்திற்கு மழை கிடைக்குமா? என்பது குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.




வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நேற்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, அரக்கோணம், விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விருதுநகர், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. இன்றும் மழை அபாயம் உள்ளதால் சென்னை, கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர் உள்பட 25 மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அரியலூர், கடலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க : School, College Leave : கனமழை எதிரொலி..! பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!! முழு விவரம்!


 



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண