வருகின்ற 17ம் தேதி வங்கக்கடலில் மீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று டெல்டா மாவட்டம் மற்றும் தென் தமிழகத்தில் மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும், டிசம்பர் 17 முதல் 19 ம் தேதி வரை தென் தமிழகத்தில் உள்ள மீனவர்கள் யாரும் கடலுக்கு சேலை வேண்டாம் எனவும், அதேபோல், தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


 






டிசம்., 15 : 


டெல்டா மாவட்டங்கள், காரைக்கால் பகுதி, புதுக்கோட்டை மற்றும் அதை ஒட்டியுள்ள தமிழகம் மற்றும் தென் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. முக்கியமாக வறண்ட வானிலை தமிழகத்தின் இதர பகுதிகளில் நிலவும், தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் லேசான மழை பெய்யும்.


(16 to 19.12.2021)


தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. வட தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


 






அதேபோல், சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணிநேரத்திற்கு: வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும். அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை முறையே 31°C மற்றும் 24"C ஆக இருக்கும் எனவும்,அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும். அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை முறையே 31°C மற்றும் 24°C ஆக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


Watch Video: பாகிஸ்தானில் மீண்டும் ஒரு வாசிம்.. 20 வயது பையன் கையில் பறக்கும் பல யார்க்கர்!


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூட்யூபில் வீடியோக்களை காண