1. ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்கும் வகையில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை மதுரை மண்டல காவல் கண்காணிப்பாளர்  பாஸ்கரன் தலைமையில் நெல்லை இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி,  மற்றும் போலீசார் வள்ளியூர் அருகே நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு லாரியில் 14 டன் ரேஷன் அரிசி இருப்பது கண்டறியப்பட்டது. மொத்தம் ஒருநாள் இரவில் நடந்த சோதனையில் சுமார் 58 டன் ரேஷன் அரிசி மற்றும் 4 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. 

 

2. தூத்துக்குடி விமான நிலையத்தில் சபாநாயகர் அப்பாவு, பா.ஜ.க தலைவர் அண்ணாமலை இரு தரப்பு கட்சியினரையும் தவிர்த்து தனியே பேசுக் கொண்டனர்.

 

3. தூத்துக்குடி தாளமுத்துநகர் போலீசார்  ரோந்து பணியில் ஈடுபட்டபோது கே.வி.கே.சாமி நகர் பகுதியில் தனியார் குடோனில் ஒரு டேங்கர் லாரியில் இருந்து 5 பேர் டீசலை இறக்கிக் கொண்டு இருந்தனர். அவர்கள் போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். பின்னர் அந்த லாரியை போலீசார் சோதனையிட்ட போது, அதில் கலப்பட டீசல் இருந்தது தெரியவந்தது.

 

4. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் விஷம் குடித்துவிட்டு  தந்தை - மகன் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டனர். அவர்களின் பிணத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

5. சிவகங்கை அருகே தமறாக்கியில் மது எடுப்பு திருவிழாவில் இளைஞர்கள், சிறுவர்கள் உடம்பில் சகதியைப் பூசி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

 

6. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கணேசபுரம் கருணாநிதி நகரில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் புறம்போக்கு இடத்தில் வசிக்கின்றன. அவர் களில் பலருக்கு 2008-ல் அரசு சார்பில் பட்டா வழங்கப்பட்டது. 

இந்நிலையில் பட்டா வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத் ததை அறிந்த சிலர் பட்டாக்களுக்கு பணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது.இதையறிந்து  பட்டா கேட்டு 200-க்கும் மேற் பட்டோர் தேவகோட்டை கோட் டாட்சியர் அலுவலகம் அருகே மறியலில் ஈடுபட்டனர்.

 

7. சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் கோசாலை அமைத்தும் மாடுகளை கட்டுப்படுத்த முடியாததால் ஏழை பெண்களுக்கு மாடுகளை தானமாகக் கொடுக்க கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

 

8. பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் அவதூறு பிரச்சாரம் செய்த வழக்கில் சிறையிலிருக்கும் மாரிதாஸ் மீதான வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

505(1)&(2), 124(A), 504, 153(A) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்தது செல்லாது  எனக்கூறி, மாரிதாஸ் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவு.

 

9. ராமநாதபுரம் மணிகண்டன் விஷம் குடித்து தான் இறந்தார், மதுரையில் ஏ.டி.ஜி.பி தாமரைக்கண்ணன் செய்தியாளர்களிடம் பேட்டி.

 

10. திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இந்திய தபால் துறை சார்பில் பழநி பஞ்சாமிர்தம் தபால் உறை நேற்று வெளியிடப்பட்டது.