நிக்கோலஸ் பூரன் தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி 20 மற்றும் 3 ஒருநாள் தொடரில் விளையாட இருக்கிறது. இந்தநிலையில், நேற்று இரு அணிகளுக்கு எதிரான முதல் டி 20 போட்டி கராச்சியில் நடைபெற்றது. 


முதலில் டாஸ் வென்ற வென்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் நிக்கோலஸ் பூரன் பாகிஸ்தான் அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். அதன் அடிப்படையில் தொடக்க வீரர்களாக பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் மற்றும் டி 20 உலகக்கோப்பை தொடரில் கலக்கிய முகமது ரிஸ்வான் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட கேப்டன் பாபர் அசாம், அகில் கோசின் பந்து வீச்சில் டக் அவுட்டாகி வெளியேற, அடுத்து களமிறங்கிய பக்கர் ஜமான் 10 ரன்களில் ஏமாற்றமளித்தார். 


ரிஸ்வான் உடன் இணைந்த ஹைதர் அலி எதிரணி பந்து வீச்சாளர்கள் பந்து வீச்சை பின்னியெடுக்க, பாகிஸ்தான் அணியின் ரன் வேகம் அதிகரித்தது. இருவரும் அடுத்தடுத்து அரைசதம் அடித்து அசத்த, பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் குவித்தது. 






200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி தொடக்கம் முதலே விக்கெட்களை இழந்து தடுமாறியது. அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர் சாய் ஹோப் மட்டும் 31 ரன்கள் எடுத்து போராட்ட, பின்னே வந்த மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆகி நடையைக்கட்டினர். மேற்கிந்திய தீவுகள் அணி 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 131 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் பாகிஸ்தான் அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றிபெற்றது. 


 






இந்தநிலையில், தனது 8 வது டி 20 போட்டியில் விளையாடும் 20 வயதான பாகிஸ்தான் வீரர் வாசிம், யார்க்கர் பந்து வீசி அதிரடி வீரர் நிக்கோலஸ் பூரனை வீழ்த்திய காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. 



இதே போட்டியில் வாசிம் 4 ஓவர்களை வீசி 40 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை சாய்த்தார். இதன் மூலம் பாகிஸ்தான் அணிக்கு மீண்டும் ஒரு வாசிம் அக்ரம் வந்துவிட்டார் என பலரும் இணையதள பக்கத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர். 



மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண