Lok Sabha Election 2024: இ.பி.எஸ். தலைமையிலான அ.தி.மு.க. இருக்காது - அண்ணாமலை


தேனியில் அமமுக சார்பில் போட்டியிடும் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக பாஜக மாநில தலைவரும், அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ”விரைவில் இ.பி.எஸ். தலைமையிலான அதிமுக இருக்காது எனவும் ஜூன் 4க்கு பிறகு அ.தி.மு.க. டி.டி.வி. தினகரன் வசம் ஒப்படைக்கப்படும் என்றும் கூறினார். மேலும் படிக்க


TN Weather: தமிழகத்தில் அடுத்த 3 தினங்களுக்கு மழைக்கு வாய்ப்பு - எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?


இன்று தென் தமிழகம், வட தமிழக மேற்கு தொடர்ச்சி  மலையை ஒட்டிய பகுதிகள், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதியிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.மேலும் படிக்க


CM MK Stalin: ராகுல் காந்திக்கு இனிப்பான வெற்றியை தருவோம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!


நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு இனிப்பான வெற்றியை தருவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ராகும் காந்தி முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு இனிப்பு வழங்கிய வீடியோ வைரலான நிலையில், அதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரீ ட்வீட் செய்து முதலமைச்சர் இவ்வாறு பதிவிட்டார். மேலும் படிக்க


Vijay: விஜய் கட்டிய சாய்பாபா கோயிலில் தரிசனம்.. ஷோபா சந்திரசேகர் பற்றி ராகவா லாரன்ஸ் பகிர்ந்த தகவல்!


நடிகர் விஜய் தனது அம்மாவுக்காக சாய் பாபா கோயிலை கட்டிய தகவல் சமீபத்தில் வெளியானது. நடிகர் விஜய் கட்டிய சாய்பாபா கோயிலுக்கு சென்று விஜய்யின் அன்னை ஷோபாவுடன் நடிகர் ராகவா லாரன்ஸ் சென்று பார்வையிட்டுள்ளார். இந்தக் கோயிலின் கும்பாபிஷேக விழா கடந்த பிப்ரவரி மாதம் 10ஆம் தேதி நடந்து முடிந்ததாகவும், இந்தப் பணிகளின் போது ஷோபா, புஸ்ஸி ஆனந்த் ஆகியோர் பங்கேற்ற புகைப்படங்களும் வெளியானது குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்க