நடிகர் விஜய் (Vijay) கட்டிய சாய்பாபா கோயிலுக்கு சென்று விஜய்யின் அன்னை ஷோபாவுடன் நடிகர் ராகவா லாரன்ஸ் (Raghava Lawrence) சென்று பார்வையிட்டுள்ளார்


அம்மாவுக்காக சாய் பாபா கோயிலை கட்டிய விஜய்


  நடிகர் விஜய் தனது அம்மாவுக்காக சாய் பாபா கோயிலை கட்டிய தகவல் சமீபத்தில் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. சென்னை, கொரட்டூரில், 8 கிரவுண்ட் நிலத்தில் விஜய் இந்த சாய் பாபா கோயிலை கட்டிக் கொடுத்துள்ளார் என்றும், இந்தக் கோயிலின் கும்பாபிஷேகம் கடந்த ஃபிப்ரவரி மாதம் 10ஆம் தேதியே நடைபெற்று முடிந்தது என்றும் தகவல் வெளியானது. இந்தப் பணிகளின் போது ஷோபா, புஸ்ஸி ஆனந்த் ஆகியோர் பங்கேற்ற புகைப்படங்களும் வெளியாகி வைரலாகின.


சாய்பாபா கோயிலை பார்வையிட்ட ராகவா லாரன்ஸ்






தற்போது நடிகர் ராகவா லாரன்ஸ் இந்த சாய்பாபா கோயிலை நடிகர் விஜயின் அன்னையுடன் சென்று பார்வையிட்டு வீடியோ வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட பதிவில்  “ அனைவருக்கும் வணக்கம். இன்று நண்பன் விஜய் கட்டிய சாய் பாபா கோயிலை அவரது அன்னையுடன் சென்று பார்வையிட்டேன். நான் என்னுடைய ராகவேந்திரா ஸ்வாமி கோயிலை கட்டியபோது ஷோபா அம்மா வருகைத் தந்து இனிமையான ஒரு பாடலை பாடினார். இன்று நான் அவருடன் அவருடைய கோயிலை பார்வையிட்டதில் எனக்கு மகிழ்ச்சி. இந்த கோயிலை கட்டிய நடிகர் விஜய்க்கு நான் என்னுடைய மனமார்ந்த வாழ்த்தை தெரிவித்துக் கொள்கிறேன். மனதிற்கு நிம்மதி தரும் ஒரு அனுபவமாக எனக்கு இந்த கோயில் இருந்தது. எல்லாரும் இந்த கோயிலுக்கு வந்து ஆசீர்வாதம் பெற வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்” என்று ராகவால் லாரன்ஸ் கூறியுள்ளார்.


ராகவால் லாரண்ஸ் மற்றும் விஜய் இருவரும் இணைந்து திருமலை படத்தில் நடித்தார்கள். அப்போதிருந்து இருவருக்கும் இசையில் நெருங்கிய நட்பு தொடர்ந்து வருகிறது. விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பை முடிக்க இருக்கிறார். வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி கோட் படத்தின் முதல் பாடல் வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.