நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு இனிப்பான வெற்றியை தருவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், “ அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ். வருகின்ற மக்களவை தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு இனிப்பான வெற்றியை வழங்குவோம்.






என்னுடைய சகோதரர் ராகுல் காந்தி எனக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது. வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4ம் தேதி இந்தியா கூட்டணி நிச்சயம் வெற்றிபெறும்” என்று தெரிவித்திருந்தார். 


முன்னதாக. கோவையில் கடைக்கு சென்று இனிப்பு வாங்கிய ராகுல் காந்தி, அதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. அந்த வீடியோவை ரீ-ட்வீட் செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இத்தகைய பதிவை வெளியிட்டுள்ளார்.  


ராகுல் காந்தி: 


மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் வெற்றிபெற வேண்டும் என்ற முனைப்பில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. நாடு முழுவதும் அனைத்து கட்சிகளும் மாபெரும் பேரணிகளை நடத்தி வருகின்றன. இந்தநிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று இரவு கோயம்புத்தூரை அடுத்த சிங்காநல்லூரில் உள்ள இனிப்பு கடை ஒன்றிற்கு சென்றார், அங்கிருந்தவர்கள் அவரை பார்த்து மிகவும் ஆச்சரியப்பட்டார்கள். கடைக்காரர் மற்றும் அங்கு வேலை செய்பவர்களிடம் பேசிக் கொண்டிருந்த ராகுல் காந்தி, தனதுப் பிடித்த ஒரு கிலோ குலாப் ஜாமூனை வாங்கினார். 





அதன் பிறகு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து இனிப்புகளை வழங்கினார் ராகுல் காந்தி. தொடர்ந்து, பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி, “ மோடி அரசு உண்மையில் அதானி அரசுதான். நாட்டில் விமான நிலையங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்கள் அதானிக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இந்த அரசை மோடி அரசு என்று அழைக்காமல் அதானி அரசு என்று அழைக்க வேண்டும். மக்களை பிளவுபடுத்த், வெறுப்பையும், வெறுப்பையும் பாஜக - ஆர்.எஸ்.எஸ் அணியை தோற்கடிக்கும் போரில் இந்திய கூட்டணி வெற்றி பெறும். தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் முன்னணியில் வெற்றி பெறும்” என்றார். 


காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் பங்கேற்ற இந்த பொதுக்கூட்டத்தில் லட்சக்கணக்கான மக்கள் கூட்டம் கூடியது. கோவை, பொள்ளாச்சி, நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய தொகுதிகளைச் சேர்ந்த திமுக வேட்பாளர்களும், அகில இந்திய கூட்டணியின் முக்கியத் தலைவர்களும் பேரணியில் அணிவகுத்து நிற்கின்றனர். தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.