சாகுபடிக்கு பயன்படுத்தப்படாத விவசாய கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுத்துச் செல்லும் போது, ஆழ்துளை கிணறுகள் மூலம் தண்ணீர் எடுப்பதாக கூறி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாகவும் அதை  தடுக்க கோரி தென் சென்னை தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.




இன்று அவ்வழக்கு தலைமை நீதிபதி அமர்விற்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ‛தண்ணீர் எடுக்கவும், கொண்டு செல்லவும் உரிய ஒப்புதல்களை பெற்ற லாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எதுவும் எடுக்கப்படுவதில்லை,’ என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.


பின்னர் வழக்கு தொடர்பாக கருத்து தெரிவித்த அமர்வு, ‛உரிய ஒப்புதல்களை பெற்ற தண்ணீர் லாரி உரிமையாளர்கள், அதற்கான ஆதாரங்களுடன் தண்ணீர் எடுத்துச் செல்ல அனுமதி கோரி அதிகாரிகளுக்கு விண்ணப்பிக்கலாம், என்றும், மாறாக உரிய ஒப்புதல் பெறாத தண்ணீர் லாரிகளை அனுமதிக்க முடியாது,’ என்றும் தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்தது.