உத்தரகாண்ட்டை போல் தமிழ்நாட்டிலும் கோவில்கள் அரசு கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என  சத்குரு ஜக்கி வாசுதேவ் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலத்தைப்போல தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோவில்களும் அரசு கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், ”உத்தரகாண்ட் மாநில அரசு 51 கோவில்களை அரசு கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்து இருக்கும் செய்தி மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. சமீபத்தில் அரசு கட்டுப்பாட்டில் எடுக்கப்பட்ட இந்த கோவில்கள் மீண்டும் சமூகத்திடமே வழங்கப்பட்டுள்ளது. இது ஒரு மிகப்பெரிய விஷயம். கோவில்கள் பக்தர்களால் நிர்வகிக்கப்பட வேண்டும் என்பதை உத்தரகண்ட் அரசு உணர்ந்திருப்பது பாராட்டுக்குரியது. குறிப்பாக, இந்த மகத்தான முடிவை எடுத்த மதிப்பிற்குரிய முதல்வர் திரு.தீரத் சிங் ராவத் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களையும், ஆசிகளையும் தெரிவித்து கொள்கிறேன்.

Congratulations Shri @TIRATHSRAWAT ji, to govt of Uttarakhand & to all others who supported the #FreeTemples movement including media houses, over 3 cr people, & many spiritual & religious leaders who have stood up for this cause. I express my utmost gratitude to everyone.-Sg pic.twitter.com/nXygtRhOYR
— Sadhguru (@SadhguruJV) April 9, 2021

வரவேற்கத்தக்க இந்த நடவடிக்கையை மற்ற மாநில முதல்வர்களும் கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். பிற மாநிலங்களில் அரசு கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களை விடுவிப்பது உத்தரகாண்ட் போல் எளிமையாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், விருப்பம் இருந்தால் எத்தகைய சிக்கலுக்கும் நம்மால் தீர்வு காண முடியும். தமிழ்நாட்டில் புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் அரசும் இதுபோன்ற ஒரு முடிவை எடுக்கும் என நம்புகிறேன். இந்த தருணத்தில் உத்தரகாண்ட் அரசுக்கும், அம்மாநில மக்களுக்கும் மீண்டும் எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்

மேலும், வீடியோவுடன் சேர்ந்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “கோவில்களை விடுவிக்கும் இயக்கத்தை ஆதரித்ததற்கு, திரு. தீரத் சிங் ராவத் அவர்களுக்கும், உத்தரகண்ட் அரசு, ஊடகங்கள், 3 கோடிக்கு மேலான மக்கள், ஆன்மீக & மதத் தலைவர்கள் மற்றும் அனைவருக்கும் பாராட்டுகள். அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை வெளிப்படுத்திக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.