செட்டிபாளையம் அணைக்கு தண்ணீர் வரத்து நின்றது.
கரூர் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளதால் கரூர் அருகே செட்டிபாளையம் அணைக்கு தண்ணீர் வரத்து நின்றது. திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அமராவதி அணையில் இருந்து கடந்த அக்டோபர் மாதம் வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி வரை ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் மழைக்காலம் முடிந்ததால் தண்ணீர் வரத்து குறைந்தது. தற்போது அமராவதி அணையில் இருந்து ஆற்றில் வினாடிக்கு 400 கன அடி தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டது.
அமராவதி அணையின் நீர்மட்டம்.
90 அடி உயரம் கொண்ட அமராவதி அணையில் காலை 9 மணி நிலவரம் படி 78.09 கான அடி தண்ணீர் உள்ளது அணையில் வினாடிக்கு ஆற்றில் இருந்து 400 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது அணையில் தற்போது 30 20 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது.
இதனால் கரூர் அருகே செட்டிபாளையம் அணைக்கு காலை நிலவரப்படி தண்ணீர் வரத்து இல்லை. அமராவதி அணைக்கு காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 90 கன அடி தண்ணீர் வந்தது. புதிய பாசன வாய்க்கால்களில் 435 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 756 அடியாக இருந்தது. மாயனூர் கதவணை கரூர் அருகே மாயனூர் கதவணைக்கு வினாடிக்கு 5,973 கன அடி தண்ணீர் வந்தது. காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 5625 கன அடி தண்ணீர் வரத்து குறைந்தது. காவேரி ஆற்றில் 4,705 கன அடி தண்ணீரும் நான்கு பாசன வாய்க்கால்களில் 920 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.
ஆத்துப்பாளையம் அணையின் நீர்மட்டம்.
கரூர் மாவட்டம் க.பரமத்தி அருகே கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு காலை 6 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 17 அடியாக இருந்தது அணையில் இருந்து நொய்யல் ஆற்றில் வினாடிக்கு 95 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.