கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். 




பழைய வாக்காளர் அட்டை வைத்திருப்பவர்கள் புகைப்படம் உள்ளிட்டவை மாற்றி புது அட்டை பெறலாம். முதற்கட்டமாக ஈரோடு மாவட்ட வாக்காளர்களுக்கு வழங்கப்படும் என சத்யபிரதா சாகு கூறியுள்ளார். 


வாக்காளர் அட்டை விபரங்களில் மாற்றம் செய்பவர்களுக்கு பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய புதிய வாக்காளர் அட்டை  இலவசமாக வழங்கப்படும் என்று தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியுள்ளார்.


சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளருக்கு தகவல் தெரிவித்த அவர், கடந்த ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து பெயர் நீக்கம், திருத்தம் மற்றும் புதிய வாக்காளர் அடையாள அட்டைக்கு 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருப்பதாக தெரிவித்தார்.


வாக்காளர் அடையாள அட்டையில் ஏற்கனவே மூன்று விதமான பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. க்யூஆர் கோடு, ஹோலோகிராம் போன்ற தொழில்நுட்பங்கள் ஏற்கனவே அதில் இடம் பெற்றுள்ளன. இப்போது, போலி அட்டைகளை உருவாக்க முடியாதபடி கூடுதலாக 3 பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக சாகு கூறினார்.


மேலும், ஏப்ரல் மாதம் புதிய பாதுகாப்பு அம்சங்களும் கூடிய வாக்காளர் அடையாள அட்டை வழங்குவது குறித்த இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது என்றும் இந்தாண்டும் புதிதாக  வாக்காளர் அட்டைக்கும், மாற்றங்களுக்காகவும் விண்ணப்பித்தவர்கள் என்று 16 லட்சம் பேர் உள்ளதாக சத்ய பிரத சாகு கூறினார்.


பாதுகாப்பு அம்சத்துடன்  புதிய வாக்களர் அடையாள அட்டை வழங்கப்படவுள்ளதாகவும், தற்போது அச்சடிக்கும் பணிநடைபெற்று வருவதாக தெரிவித்த சாகு,  முதற்கட்டமாக ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதியில் வழங்கப்படவுள்ளது என்றார்.