மாரடைப்பால் மறைந்த நடிகர் விவேக் உடல் அவரது வீட்டில்வைக்கப்பட்டிருந்தது. இன்று காலை முதல் பல்வேறு பிரபலங்களும், பொதுமக்களும் விவேக் உடலுக்கு மரியாதை செலுத்தினர். நடிகராகவும், சமூக ஆர்வலராகவும் விவேக் ஆற்றிய பணியை பலரும் பாராட்டி சமூக வலைதளம் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இன்று மாலை அவரது உடல் தகனம் செய்யப்படும் என அவரது குடும்பத்தார் தெரிவித்த நிலையில், அவரது உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில் சென்னை விருகம்பாக்கத்தில் இருந்து நடிகர் விவேக்கின் இறுதி ஊர்வலம் சற்று முன் துவங்கியது. பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் ஒன்று திரண்டு அந்த ஊர்வலத்தில் பங்கேற்று வருகின்றனர். பின்னர் மேட்டுக்குப்பம் மின் மயானத்தில் விவேக் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.