பிரதமர் நரேந்திர மோடியின் டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டு, பின்னர் சரி செய்யப்பட்டது. இதனால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


PM@narendramodi என்ற பெயரில் பிரதமர் மோடி தனது ட்விட்டர் கணக்கை பயன்படுத்தி வருகிறார். இதன் மூலம், பல்வேறு தகவல்கள் மற்றும் அறிவிப்புகளை பிரதமர் நாட்டு மக்களுக்கு தெரிவித்து வருகிறார். இதனால், பல மில்லியன் மக்கள் அவரின் டுவிட்டர் பக்கத்தை பின் தொடர்ந்து வருகின்றனர். மேலும் படிக்க: Headlines Today, 12 Dec: தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா?.. கேரளாவில் பறவைக்காய்ச்சல்..! இன்னும் சில முக்கியச் செய்திகள்!


இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட ட்விட்டர் பக்கம் ஞாயிற்றுக்கிழமை (இன்று) அதிகாலையில் ஹேக் செய்யப்பட்டது. சிறிது நேரத்திற்குப் பிறகு கணக்கு மீட்டெடுக்கப்பட்டது. 


ஹேக் செய்யப்பட்டது குறித்து பிரதமர் அலுவலகம் விளக்கம் அளித்திருந்தது. அதில், பிரதமரின்ட்விட்டர் கணக்கு சிறிது நேரம் ஹேக் செய்யப்பட்டதாகவும், பிட்காயினை இந்தியாவில் சட்டப்பூர்வமாக்க போவதாக ஹேக்கர்கள் மோடியின் டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஹேக் செய்யப்பட்ட சமயத்தில் பதிவான விஷயங்களை கருத்தில் கொள்ள வேண்டாம் என்றும் கூறப்பட்டிருந்தது. மேலும் படிக்க: C-Voter Snap Poll: உத்தரகாண்டில் மீண்டும் பாஜக.. பஞ்சாபில் ஆம் ஆத்மி.. ஏபிபி - சிவோட்டர் சர்வே கருத்துக் கணிப்பு!


 






ஹேக் செய்யப்படுவதற்கு முன்பாக, பிரதமர் மோடியின் டுவிட்டர் பக்கத்தில், ‘இந்தியா அதிகாரப்பூர்வமாக பிட்காயினை சட்டப்பூர்வ டெண்டராக ஏற்றுக்கொண்டது. அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக 500 BTC ஐ வாங்கி, நாட்டின் அனைத்து குடியிருப்பாளர்களுக்கும் விநியோகித்து வருகிறது’ எனப் பதிவிடப்பட்டிருந்தது. மேலும் படிக்க: Watch Video: ''இது அப்பா யூஸ் பண்ணது''! விங் கமாண்டோவின் தொப்பியை தலையில் மாட்டிய மகன்.! கண்கலங்கிய கூட்டம்!







 


மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...


 


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொட


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூடியூபில் வீடியோக்களை காண