பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டம்

விழுப்புரம் : பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் சம்பா நெல் பயிருக்கு காப்பீடு செய்ய விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் 2024-25 ஆம் ஆண்டிற்கு அறிவிக்கை செய்யப்பட்டுள்ள சம்பா நெல் பயிருக்கு பயிர் காப்பீடு செய்ய மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி கேட்டுக்கொண்டார். இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பயிர் இழப்பினை ஈடுசெய்வதற்கும்.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீட்பதற்காகவும் விழுப்புரம் மாவட்டத்தில் 2024- 25ஆம் ஆண்டு சாகுபடி செய்யும் காரீப், சம்பா மற்றும் ராபி பருவத்தில் பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மாவட்டத்தில் சம்பா பருவத்திற்கு 13 வட்டாரங்களில் உள்ள 794 வருவாய் கிராமங்கள் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. சம்பா பருவத்தில் நெல்-II நடவு செய்துள்ள விவசாயிகள் 15.11.2024-க்குள் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம். விழுப்புரம் மாவட்டத்திற்கு பயிர் காப்பீட்டு நிறுவனமாக Universal Sompo General Insurance Co.Ltd. நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

அறிவிக்கப்பட்ட பயிர் விவசாயி செலுத்த லுத்த வேண்டிய பிரிமியம் ( ரூபாய் / ஏக்கர் ) காப்பீட் காப்பீட்டுத் தொகை (ரூபாய் / ஏக்கர்) பயிர் காப்பீடு செய்ய கடைசி நாள்
நெல்- II 517.5 34500 15.11.2024

பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் வாயிலாக காப்பீட்டுத்தொகை செலுத்தி பதிவு செய்ய வேண்டும்.

பதிவு செய்ய தேவையான ஆவணங்கள்

1) அடங்கல் 1434 பசலி
2) சிட்டா
3) வங்கி கணக்கு புத்தகம்
4) ஆதார் எண்


நடப்பு பசலி பருவ அடங்கல், சிட்டா, வங்கி கணக்குப்புத்தகம் மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றுடன் பதிவு செய்யும் விவசாயியின் பெயர், நிலப்பரப்பு, சர்வே எண், உட்பிரிவு, பயிரிட்டுள்ள நிலம் இருக்கும் கிராமம் ஆகிய விவரங்களை சரியாக அளித்து விவசாயிகள் பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் விவரங்களை அறிய அருகில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தை அனுகவும். எனவே, சம்பா பருவத்தில் நெல் பயிரிட்டுள்ள விவசாயிகள் 15.11.2024க்குள் காப்பீடு செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் (PMFBY)

2019-2020 ஆம் ஆண்டு (பசலி 1429) பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அறிவிக்கைச் செய்யப்பட்ட பயிர்களுக்கு உதவி வேளாண் அலுவலர்களால் பயிர் அறுவடைப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, சராசரி விளைச்சல் விவரங்கள் கணக்கிடப்பட்டு, வறட்சி, வெள்ளம், புயல், போன்ற இயற்கை சீற்ற பாதிப்புகள் ஏற்படும் போதும், பூச்சி மற்றும் நோயினால் பயிர்களுக்கு சேதம் ஏற்படும் போதும் விவசாயிகளுக்கு காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. பொருள்இயல் மற்றும் புள்ளிஇயல் துறையினரால் பயிர் அறுவடைப் பரிசோதனைகள் திட்டமிடப்பட்டு மேற்பார்வையிடப்படுகிறது.

2019-2020 ஆம் ஆண்டுக்கு காரிப் பருவத்திற்கு 31 பயிர்களுக்கு 83,076 பரிசோதனைகளும், சிறப்பு பருவத்தில் 4 பயிர்களுக்கு 53,144 பரிசோதனைகளும் மற்றும் ராபி பருவத்தில் 34 பயிர்களுக்கு 1,12,048 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் கீழ் அறிவிக்கைச் செய்யப்பட்ட பயிர்களுக்கு விளைச்சல் விவரங்கள் கணிக்கப்பட்டு தொடர்புடைய காப்பீட்டு நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டு வருகின்றன. மேலும் தொடர்புடைய துறையினரால் ஒத்திசைவு செய்யப்பட்டு அறிவிக்கை செய்யப்பட்ட பயிர் பரப்பு விவரங்கள் ஒவ்வொரு பருவ இறுதியிலும் காப்பீட்டுக் கழகங்களுக்கு அளிக்கப்பட்டு வருகின்றன.