அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி மீண்டும் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றால் தான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையும் என கழக மகளிர் அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பா.வளர்மதி தெரிவித்துள்ளார்.


தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து கழக மகளிர் அணி மற்றும் இளம் பெண்கள் பாசறை சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


மகளிர் அணி செயலாளர், முன்னாள் அமைச்சருமான பா.வளர்மதி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, கழக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கோகுல இந்திரா முன்னிலை வகித்தார்.


கண்டன ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையாற்றிய மகளிர் அணி செயலாளர் பா வளர்மதி ;


தமிழகத்தில் 2 மணி நேரத்துக்கு ஒரு பெண் பாலியல் துன்புறத்தலுக்கு ஆளாக்கப்படும் அளவுக்கு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தமிழகத்தில் அதிகரித்து விட்டதாக குற்றம் சாட்டினார். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைய வேண்டுமென்றால், தமிழகத்தில் மீண்டும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி முதல்வராக வரவேண்டும் என்றார்.


அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றால் தான் பெண்களுக்கான திட்டங்கள் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என்றார்.


தொடர்ந்து பேசிய கழக அமைப்பு செயலாளரும்,  முன்னாள் அமைச்சருமான கோகுல இந்திரா ,


அதிமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கு என தனி அமைப்பு இருந்ததாகவும், அதன் மூலம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உடனுக்குடன் ஒடுக்கப்பட்டதாக தெரிவித்தார். ஆனால் விடியா திமுக ஆட்சியில், உங்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்திருக்கும் இந்த வேலையில் தமிழக முதலமைச்சர் உல்லாசமாக சுற்றுலா சென்று இருப்பதாக அவர் விமர்சித்தார். 


கழக செய்தி தொடர்பாளர் சசிரேகா ,


சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, ஸ்டாலின் தான் வராரு, விடியல் தரப் போறாரு என்று கூறிவிட்டு, தற்போது ஸ்டாலின் எங்கே போனாரு, உப்பு போட்டு திங்கிறாரா என்று மக்கள் கேள்வி எழுப்பும் அளவுக்கு நிலைமை மாறி இருப்பதாக கூறினார். 


கழக செய்தி தொடர்பாளர் சிவசங்கரி 


பெண்களுக்கு 50% வரை உள்ளாட்சி நிர்வாகத்தில் அதிமுகவுக்கு இடம் அளிக்கப்பட்டதாகவும், ஆனால் தற்போதைய திமுக ஆட்சியில் பெண்களின் உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டு இருப்பதாக குற்றம் சாட்டினார்.


கழக செய்தி தொடர்பாளர் அப்சரா ரெட்டி ; 


பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்திருப்பதால் தமிழக முழுவதும் அனைத்து தரப்பு பெண்களும் கடுமையாக பாதித்திருப்பதாக குற்றம் சாட்டினார். 


மாநில மகளிர் அணி துணை செயலாளர் அமுதா அருணாச்சலம்,


அதிமுகவை விமர்சிப்பதில் தான் திமுகவின் கவனம் செலுத்துகிறார்கள் தவிர தமிழகத்தில் நடைபெறும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து, சட்டம் ஒழுங்கு சீர்கேட்டு போனதாக அவர் குற்றம் சாட்டினார்.


கழக செய்தி தொடர்பாளர் நிர்மலா பெரியசாமி ,


தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை பார்க்கும் பொழுது ஒட்டுமொத்த பெண்களின் நெஞ்சும் பதறுகிறது என்றும் கூறினார்.


கழக மருத்துவ அணி இணை செயலாளர் அபா ரூபா சுனந்தினி,


அதிமுக ஆட்சியில் பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பு இருந்ததாகவும், தற்போதைய விடிய அதிமுக ஆட்சியில் பெண்களுக்கான எவ்வித பாதுகாப்பும் இல்லாத நிலை இருப்பதாக குற்றம் சாட்டினார். 


கழக மகளிர் அணி துணை செயலாளர் காயத்ரி ரகுராம் ,


அதிமுக ஆட்சியில் பெண்களுக்கு கொடுக்கப்பட்ட அனைத்து அதிகாரங்களும், திமுக ஆட்சியில் அனைத்து அதிகாரங்களும் ஒடுக்கப்பட்டு இருப்பதாக குற்றம் சாட்டினார்.


கழக கொள்கை பரப்பு இணை செயலாளர் விந்தியா ,


திமுகவில் இருக்கக் கூடிய பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற நிலை இருப்பதாகவும் நடிகை விந்தியா குற்றம் சாட்டினர். திமுகவுக்கு நாட்டு மக்கள் மீதும் அக்கறை இல்லை இன்று குற்றம் சாட்டிய அவர், தமிழகத்தில் பகலில் கூட பெண்கள் தனியாக நடந்து செல்ல முடியவில்லை என குற்றம் சாட்டினார்.


கழக மகளிர் அணி இணை செயலாளர் கிருத்திகா,


அதிமுக ஆட்சியில் மகளிர்க்கு அளிக்கப்பட்ட முன்னுரிமைகள் குறித்தும், மகளிருக்கு அளிக்கப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டு பேசினார்.


இறுதியாக கழக தலைமை செயற்குழு உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான வி.எம் ராஜலட்சுமி நன்றி உரையாற்றினார். அப்போது பேசிய அவர் அதிமுக ஆட்சியின் போது பெண்களுக்கு எண்ணற்ற திட்டங்களை அளித்ததாகவும் அவர் கூறினார்