விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை 3 நகராட்சிகளும், 7 பேரூராட்சிகளும் உள்ளன. இதில் விழுப்புரம் நகராட்சியில் 42 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும்,  திண்டிவனம் நகராட்சியில் 33 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், கோட்டக்குப்பம் நகராட்சியில் 27 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் ஆக மொத்தம் 102 பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது.




விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விழுப்புரம், திண்டிவனம், கோடக்குப்பம் உள்ளிட்ட 3 நகராட்சி, அனந்தபுரம், அரகண்டநல்லூர், செஞ்சி, மரக்காணம், திருவெண்ணெய்நல்லூர், வளவனூர், விக்கிரவாண்டி ஆகிய 7 பேரூராட்சிகளில் 210 பதவிகளுக்கு 935 பேர் களத்தில் உள்ளனர். இதில் விக்கிரவாண்டியில் ஒருவர், அரகண்டநல்லூரில்ஒருவர் என இருவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகளில் மொத்தம் 1,42,022 ஆண் வாக்காளர்களும், 1,51,109 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தினர் 55 பேரும் ஆக மொத்தம் 2,93,186 வாக்காளர்கள் உள்ளனர். தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் தற்போது வேட்பாளர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.






இந்த நிலையில் விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட வழுதரெட்டி வார்டு எண் 32 விசிக சார்பில் போட்டியிடும் வித்தியாசங்கரி பெரியார் அவர்களை ஆதரித்து அம்பேத்கர் போல் வேடமணிந்து வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். மேலும் இப்பகுதியில் உள்ள அனைத்து குறைகளும் சட்டத்தின் மூலமாக எதிர்கொண்டு இப்பகுதி மக்களின் குறைகளை தீர்த்து வைக்கப்படும் என உறுதி அளித்தார். அம்பேத்கர் போல் வேடமிட்டு வாக்கு சேகரித்தது அப்பகுதி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.


அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி 5 லட்சம் மோசடி செய்த தபால் ஊழியர் கைது