தமிழ்நாடு முழுவதும் ஒரே கட்டமாக வரும் 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக அனைத்து கட்சிகளும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளது. அந்தவகையில் நேற்று விழுப்புரத்தில் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அந்தத் தேர்தல் பிரச்சாரத்தின் போது காவல்துறையினரை அவதூறாக பேசிய புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் மீது 2 பிரிவுகள் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக நேற்று விழுப்புரம் நகராட்சியில் உள்ள 42 வார்டுகளில் அதிமுக சார்பில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பழைய பேருந்துநிலையம் அருகில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் கலந்துக்கொண்டு உரையாற்றினார். அப்போது, "திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டு காலத்தை நெருங்கிக்கொண்டு இருக்கிறது. ஆனால் வாக்குறுதிகளை திமுக மறந்துவிட்டது. என்ன வாக்குருதி கொடுத்தோம் என்பதை ஸ்டாலின் மறந்துவிட்டார். பொங்கல் தொகுப்பில் நடைபெற்ற முறைகேடு நிர்வாக சீர்கேட்டை வெளிக்காட்டி உள்ளது. திறமையற்ற முதல்வர் ஸ்டாலின். பழனிசாமியும், நானும் தமிழகத்தின் பூர்வீக குடிகள். உண்மையான தமிழர்கள், ஸ்டாலினை போல் வந்தேரிகள் அல்ல. பிழைப்புக்காக தமிழ்பேசும் போலி தமிழர்கள் அல்ல. திமுக தேவைப்பட்டால் மாநில சுயாட்சி குறித்து பேசும், இல்லை என்றால் மாநில சுயாட்சியை காலில் போட்டு மிதிக்கும்.
நீட் குறித்து பேச பழனிசாமியை நேருக்கு நேர் அழைத்தார் ஸ்டாலின், எங்கள் பழனிசாமி தந்தந்தனியாக வருவார். நீட் தேர்வை ரத்து செய்ய பாராளுமன்றம் சட்டம் கொண்டு வர வேண்டும் இல்லை என்றால் சட்டப்போராட்டம் நடத்தி வெற்றி பெற வேண்டும். நீட் தொடர்பாக வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து ஏன் திமுக பறு சீராய்வு செய்யவில்லை என கேள்வி எழுப்பினார். நீட் தேர்வை வைத்து மாணவர்களின் உணர்வுகளை தூண்டிவிட்டு, வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் வரை ஆளுநர், மத்திய அரசு என பேசுவார்கள். தேர்தல் ஜனநாயக முறையில் நடத்தப்பட வேண்டும். இன்றைக்கு சென்னையில் உள்ள ரவுடிகள் தமிழகம் முழுவதும் பரவி உள்ளாட்சி தேர்தலில் பரவி வேலை செய்கிறார்கள். நான் கடந்த காலங்களில் மரணத்தை கண் முன்னால் பார்த்தவன், எங்களை அச்சுறுத்த நினைக்க வேண்டாம். தேர்தல் ஆனையம் முழுக்க முழுக்க திமுகவின் கைப்பாவையாக செயல்படுகிறது.
அப்போது கூட்டத்தில் சிவி.சண்முகம் பேசிக்கொண்டிருந்த போது கூட்டத்தில் இருந்த ஒருவர் பேச்சை நிறுத்துமாறு கூறினார். இதனால் ஆத்திரமடைந்த சிவி.சண்முகம். இந்த மிரட்டலுக்கு நான் பயப்பட மாட்டேன் எனக்கூறினார். பொன்முடியை வர சொல்லுடா, உன்னை போல் ஆயிரம் பேரை பார்த்து விட்டேன் என தெரிவித்தார். காவல் துறையினரை எச்சரிக்கிறேன் என்னை மிரட்ட நினைக்க வேண்டாம். இரவு 12 மணி வரை இங்கேயே இருக்கிறேன் தைரியம் இருந்தால் திமுகவினர் நேரில் வாங்கடா என சவால் விடுத்து பேசினார். காவல்துறை இல்லை இது ஏவல்துறை" எனக் கூறியிருந்தார்.
மேலும் படிக்க: வினாத்தாள் லீக் விவகாரம்: 2 தனியார் பள்ளிகளுக்கு சம்மன்...! பள்ளிக்கல்வித்துறை அதிரடி