துாங்கிக் கொண்டிருந்த கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி


விழுப்புரம் அடுத்த குடிமியான்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 51) தனியார் பேருந்து ஓட்டுனராக உள்ளார். இவரது மனைவி செல்வி, 50, இவர்களுக்கு திருமணமாகி இரண்டு பிள்ளைகள் உள்ளனர். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, செல்வி தனது தாய் மதனவள்ளி மற்றும் பிள்ளைகளுடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் செல்வி வீட்டிற்கு சென்ற கார்த்திகேயன், குடும்பம் நடத்த வருமாறு தகராறு செய்து விட்டு வந்துள்ளார்.


கொலை முயற்சி என வழக்குபதிவு


அதன் பிறகு, தனது தாயுடன் நள்ளிரவு கணவர் வீட்டிற்கு சென்றார். அங்கு, துாங்கிக் கொண்டிருந்த கார்த்திகேயன் மீது இருவரும் கொதிக்கும் எண்ணெயை ஊற்றியுள்ளனர். இதில் படுகாயமடைந்த கார்த்திகேயன் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். கார்த்திகேயன் அளித்த புகாரின் பேரில், வளவனுார் போலீசார் கொலை முயற்சி வழக்குபதிவு செய்து, செல்வியை கைது செய்தனர். மேலும் மதனவள்ளியை தேடி வருகின்றனர்.


குடும்ப ஆலோசனை


குடும்ப ஆலோசனை என்பது ஒரு வகையான சிகிச்சையாகும், இது குடும்பங்கள் பிரச்சினைகளைத் தீர்க்கவும் உதவுகிறது. இது முழு குடும்பத்தையும் உள்ளடக்கிய ஒரு வகையான ஆலோசனையாகும். இது முறையான குடும்ப சிகிச்சையாளர்கள் அல்லது குடும்ப உளவியலாளர்களால் வழங்கப்படுகிறது . குடும்ப ஆலோசனையானது மோதல்கள் மற்றும் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கும், நெருக்கடிகள் அல்லது அதிர்ச்சிகரமான நிகழ்வுகளைச் சமாளிப்பதற்கும், அடிமையாதல், மனநோய் அல்லது விவாகரத்து போன்ற கடினமான பிரச்சினைகளைக் கையாள்வதற்கும் பயனுள்ளதாக இருக்கும்.