மகளிர் சுய உதவிக் குழு மூலம் விற்கப்படும் மூலிகைப் பொருட்களால் சோப்புகள் தயாரித்து விற்பனை செய்து வாழ்க்கை தரத்தை உயர்த்திகொள்ளும் பட்டதாரி பெண்.


மூலிகைப் பொருட்களால் சோப்புகள் தயாரித்து விற்பனை


விழுப்புரம் மாவட்டம் புதிய பேருந்து நிலையம் பக்கத்தில் உள்ள பூமாலை வணிக வளாகத்தில், ஸ்ரீ வெக்காளியம்மன் சுய உதவி குழு மூலம் மூலிகைப் பொருட்கள், சோப்பு ஹேர் ஆயில் விற்பனை செய்யப்படுகிறது. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, தமிழ்நாடு மாநில ஊரக / நகர்ப்புற வாழ்வாதாரம் இயக்கம் மூலம் பல்வேறு பகுதிகளில் மகளிர் சுய உதவி குழுக்கள் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் கோலியனூர் வட்டாரம் பொய்யப்பாக்கம் ஊராட்சி பகுதிகளில் ஸ்ரீ வெக்காளி அம்மன் சுய உதவி குழு செயல்பட்டு வருகிறது.




ஸ்ரீ வெக்காளியம்மன் சுய உதவி குழுவில் செயல்படுபவர் ராஜேஸ்வரி (30), இவர் ஒரு பட்டதாரி பெண். ஒரு வருடமாக பொது மக்களுக்கு பயன்படும் வகையில் வீட்டிலேயே இயற்கை முறையில் தயாரிக்கப்படும் மூலிகை பொருட்கள், குளியல் சோப் வகைகள், ரோஸ் வாட்டர், ஹேர் ஆயில் தயாரித்து விழுப்புரம் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்து வருகின்றனர்.


ஏழு வகைகளில் குளியல் சோப்பு


இவர்களிடம் ஏழு வகைகளில் குளியல் சோப்பு வகைகளும், ஆவாரம் பூ சோப்பு (75),கேரட் சோப்பு (30), நலங்கு மாவு சோப்(75), வேப்பிலை சோப் (50), துளசி சோப் (55), குப்பைமேனி சோப் (55) ஜாதிக்காய் சோப் (75), ரோஸ் வாட்டர்(35), ஹேர் ஆயில் (தேங்காய் எண்ணெய்)-(70), ரோஸ் இதழ் பொடி  (35) என்ற விலையில் இந்த குழு மூலம் அனைத்தும் விற்பனை செய்யப்படுகிறது.




இந்த குழு மூலம் தயாரிக்கப்படும் அனைத்து பொருட்களும் அரசு சம்பந்தப்பட்ட விழாவில் ஸ்டால்கள் ஆக அமைத்து விற்பனை செய்யப்படுகிறது. அது மட்டுமல்லாமல் உள்ளூர்களிலும் விற்பனை செய்து வருகிறோம் எனவும், கல்லூரி மாணவிகள் இதற்கு நல்ல ஒத்துழைப்பு தருகிறார்கள் எனவும் ராஜேஸ்வரி தெரிவித்தார்.