கரூருக்கு வருகை தந்த அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மாவட்ட ஆட்சியர், எஸ்.பி, அரசு அதிகாரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.


 




பணப்பரிமாற்ற தடைச் சட்டம் வழக்கில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவையடுத்து 15 மாதங்களுக்கு பிறகு புழல் சிறையில் இருந்து கடந்த 26-ஆம் தேதி அமைச்சர்  ஜாமீனில் வெளியே வந்தார்.


 




அதனை தொடர்ந்து செந்தில்பாலாஜி மீண்டும் மின்சாரத் துறை அமைச்சராக பதவி ஏற்றார். இந்த நிலையில், ஜாமினில் இருந்து வெளியே வந்த பிறகு முதன் முறையாக சொந்த ஊரான கரூருக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி வருகை தந்துள்ளார். 


 


 




கரூர் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள பயணியர் மாளிகைக்கு வருகை தந்த அமைச்சர் செந்தில்பாஜியை மாவட்ட ஆட்சியர் தங்கவேல், எஸ்.பி பெரோஸ் கான் அப்துல்லா, அரசுத்துறை அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் சால்வை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.


 




அமைச்சர் செந்தில் பாலாஜி பயனியர் மாளிகைக்கு வந்த நிலையில் தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளை சந்தித்த பிறகு மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த திமுக நிர்வாகிகளை ஒருவர் பின் ஒருவராக சலிக்காமல் தனது புன்னகையுடன் அனைவரையும் வரவேற்று அவர்கள் வழங்கிய புத்தகம் இனிப்பு சால்வை பெற்றுக் கொண்டார்.


 




கூடுதலாக திமுக நிர்வாகிகள் அவருக்கு சாக்லேட் மாலை அணிவிக்க போராட்டத்திற்குப் பிறகு அதனை அவர் பெற்றுக் கொண்டார். ஒரே இடத்தில் ஆயிரக்கணக்கான நபர்கள் திரண்டதால் அங்கு பெண்கள், ஆண்கள் என அனைவரும் தள்ளுமுள்ளு உடன் அவரை நேரில் சந்தித்து தங்களது வாழ்த்துகளையும், ஆசிகளையும் பெற்றனர்.


 


 




ஜாமின் கிடைத்து அவர் பதவியேற்ற போது இவரை சந்திக்க பல்வேறு திமுக கிளை பொறுப்பாளர்கள் முயற்சித்த நிலையில் நேரம் கிடைக்காமலும், அவரை சந்திக்க இயலாத காரணத்தாலும் கரூர் மாவட்டத்திற்கு மீண்டும் அமைச்சராக பதவி ஏற்ற பிறகு முதல் முறையாக வந்த போது அவரைக் காண அவரது ஆதரவாளர்கள் நீண்ட வரிசையில் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.